தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

தமிழ் சிறுவர்களை பிரான்சுக்கு விற்பனை செய்த தர்கர்கள் வசமாக மாட்டிக்கொண்டார்கள் !

துஷ்பிரயோக நோக்கில் வௌிநாட்டவருக்கு சிறுவர்களை விற்பனை செய்யும் இருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் பிரான்சில் கைதானார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இலங்கை சிறுவர்கள் சிலரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸ் பொலிஸாரால் இலங்கை பொலிஸார் ஊடாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் பிரஜைக்கு சிறுவர்களை விற்பனை செய்த தரகர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என மேலும் அதிர்வு இணையம் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/182.html

Geen opmerkingen:

Een reactie posten