[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 03:35.45 AM GMT ]
கதிரவெளி, புச்சாக்கேணியைச் சேர்ந்த து.கோணலிங்கம் (வயது 38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் வெருகல் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல்போனதாகவும், உறவினர்கள் நேற்று இது தொடர்பாக வாகரைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலே குறித்த நபர் ஆற்றில் சடலாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வெருகல், கல்லரிப்பு பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது வாகரை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாகரைப் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaix0.html
கடமையில் இருந்த இரு பொலிஸார் மீது அசிட் வீச்சு - வல்லப்பட்டையுடன் ஐந்து போ் கைது
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 03:41.06 AM GMT ]
இன்று அதிகாலை இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மாவனெல்லை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வல்லப்பட்டையுடன் ஐந்து போ் கைது
விற்பனைக்காக வல்லப்பட்டையை கொண்டு சென்ற ஐந்து பேரை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தல்லனை பிரதேசத்தில் இளைஞர் குழுவொன்று வல்லப்பட்டையை விற்பனைக்காக கொண்டு செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெவட்ட கெதர தலைமையிலான குழுவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
ஒன்றரை இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டடையுடன் கைதான சந்தேக நபர்கள் 19.06.2014 அன்று அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaix1.html
காத்தான்குடியில் வர்த்தகர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவரின் வீட்டில் கழிவொயில் வீச்சு
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 03:58.02 AM GMT ]
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கழிவொயில் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி 4ஆம் குறிச்சி மின்சார நிலைய ஒழுங்கையிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியரின் வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அளுத்கம சம்பவத்தை கண்டித்து காத்தான்குடியில் இன்று அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படமாட்டாது எனவும் வர்த்தகர்கள் வழமைப்போன்று கடைகளை திறக்கலாமென இவர், தனது தலைமையிலான வர்த்தக அமைப்பின் அங்கத்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவல் அனுப்பபட்டு சில நிமிடங்களிலேயே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaix2.html
இரவு நேர கார்ப்பந்தயங்களுக்கு அஸ்கிரிய மகாநாயக்கர் எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 05:49.42 AM GMT ]
கண்டியின் வரலாற்று தலங்களை பாதுகாக்கும் நிதிய உறுப்பினர்கள் தம்மை சந்தித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கண்டி நகரம் சிறிய நகரம் என்ற வகையில் இங்கு இரவு நேர கார்ப்பந்தயங்களை நடத்துவது உசிதமானது அல்ல என்று தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் பல வருடங்களாக இதனை வலியுறுத்தி வருகின்ற போதும் ஏற்பாட்டாளர்கள் தமக்கு எதிராகவே செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaix7.html
சர்வதேச விசாரணைக்கான வழியை அரசாங்கம் ஏற்படுத்தியது - ஜோன் அமரதுங்க
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 05:54.32 AM GMT ]
அரசாங்கம் கொண்டு வந்த ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணை தொடர்பான யோசனைக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்காளிக்காது ஐக்கிய தேசியக் கட்சி ஏன் தவிர்த்து கொண்டது என்பது பற்றி தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை தொடர்பில் நடத்த உள்ள விசாரணையை நடத்தக் கூடாது என்ற யோசனையை அரசில் அங்கம் வகிக்கும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
இந்த விசாரணைகளுக்கு காரணமாக அமைந்த காட்டிக்கொடுக்கப்பட்ட உடன்படிக்கையை பலமற்றதாக்கவும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக கடந்த கால கட்டமைப்புகளை உயிர்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த திருத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்கவில்லை என்பதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சி நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது புறக்கணிக்க நேர்ந்தது.
நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் இறையாண்மை, தேசிய ஒருமைப்பாடு என்பவற்றை உச்சளவில் மதிக்கும் அதேவேளை ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் போன்றவற்றை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கடுமையான நம்பிக்கையை கொண்டுள்ளது.
இவற்றுக்கு தேவையான வலுவான கட்டமைப்புகளும், நீண்டகால அனுபவமும் , சர்வதேச அங்கீகாரமும் இலங்கைக்கு இருந்து வந்தது என்பதை ஐக்கிய தேசியக் கட்சி கௌரவத்துடடன் நினைவூட்ட விரும்புகிறது.
எனினும் நாட்டின் முப்படையினர், சிவில் மக்கள் தொடர்ந்தும் உயிர்களை தியாகம் செய்து நீண்டகால அர்ப்பணிப்புக்களை செய்து, பயங்கரவாதத்தை தோற்கடித்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், துரதிஷ்டவசமாக அரசாங்கம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் சர்வதேச விசாரணைக்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டது.
அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த ஷரத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அந்த கூட்டறிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டதாக அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவ விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், 1815 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட மேல் நாட்டு உடன்படிக்கைக்கு பிறகு நாட்டை காட்டிக்கொடுத்த மிகப் பெரிய உடன்படிக்கையாக இந்த கூட்டறிக்கையை கருத முடியும் எனவும் ஜோன் அமரதுங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahoy.html
Geen opmerkingen:
Een reactie posten