தேரருக்கு சுன்னத் செய்ய முற்பட்டனரா கடத்தல் காரர்கள் என்று சந்தேகம்
பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகாமையில் விஜித தேரர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். சாரதியொருவர் காவல்துறையினருக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, விஜித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரகமப் பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தேரர் இன்று காலை தாக்கப்பட்டு அநாதாரவான இடத்தில் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேரரின் மர்ம உறுப்பை குறி வைத்துபிளேட்டினால் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிய வருகிறது.எனவே இவர் முஸ்லிம்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ண்டுள்ளதால் இவர் முளிம்களின் மத சம்பிரதாயமான சுன்னத் செய்யவேண்டுமென்ற விமர்சனத்தை கடும்போக்கு புத்த மத செயல்பாட்டாளர்கள் முன்வைத்தனர் அதன் செயல் வடிவமே இது என்று நோக்கர்கள் கருதுகின்றனர்
இவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று நீண்ட நாள்களாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேரரை இனந்தெரியாதோர் இன்று தாக்கி காயப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜித தேரர், பொதுபல சேனா இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து அதன் நடவடிக்கைகளுக்கு எதிர்பு வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜித தேரர் முஸ்லிம் கடும்போக்காளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/73799.html
உலகில் பின்தள்ளப்பட்ட இலங்கை
உலகில் அமைதியான நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா மேலும் பின்னடைவு கண்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கான பூகோள அமைதிச் சுட்டி (Global Peace Index) அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிறிலங்கா 105வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியா 143வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், மிகவும் அமைதியான நாடுகளாக- ஐஸ்லாந்து, டென்மார்க், ஒஸ்ரியா, நியூசிலாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை இடங்களைப் பிடித்துள்ளன.
கடைசியான 162வது இடத்தை, ஈராக், சொமாலியா, சூடான். தென் சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குஎடியரசு, சிரியா ஆகிய நாடுகள் பங்கு போட்டுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/73804.html
தமிழக மீனவர் பிரச்சினை: சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
இந்த நிலையில் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 50 நிமிட நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் பல்வேறு அமைச்சக அதிகாரிகளின் கூட்டம் இன்று நடக்கிறது. இதற்காக தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டது. இன்றைய கூட்டத்திலும் இது குறித்து பேசப்படும். நிரந்தர தீர்வு கான்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
http://www.jvpnews.com/srilanka/73790.html
Geen opmerkingen:
Een reactie posten