தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 juni 2014

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!- தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த கோரிக்கை!

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் புதியதோர் அணுகுமுறையை இந்தியா கையாள வேண்டுகின்றோம்: பிரதமர் வி.ருத்ரகுமாரன்
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 11:02.09 AM GMT ]
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பலமான, உறுதியான, தீர்க்கதரிசனமான நிலைப்பாட்டினை, தங்கள் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கும் என பெரிதும் நம்புகின்றோம் என்று, இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்..
இலங்கைத்தீவில் நிலவும் தமிழினத்தின் தேசியப் பிரச்சனை தொடர்பாக, தாங்கள் புதியதோர் அணுகுமுறையை மேற்கொள்ளல் வேண்டும் என்ற வேண்டுகோளைத் தங்களின் ஆலோசனைக்குச் சமர்ப்பிக்க விரும்புகின்றோம் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
ஈழத்தமிழனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பரிகாரநீதி கிடைப்பதற்கு, சகல வழிகளிலும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
கடந்தகால நிகழ்வுகளின் பின்னணியிலும் வரலாறு எமக்கு உணர்த்தியுள்ள படிப்பினையின் அடிப்படையிலும், எமது பாரம்பரிய தாயகத்தில் எமது இனத்தின் தனித்துவத்தைப் பேணுவதற்கும், எமது இனம் அங்கு நிலைத்து நிற்பதற்கும், சுதந்திரமும் இறைமையும் படைத்த தமிழீழ அரசே எமக்குள்ள ஒரேயொரு தீர்வு என நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இத்தகைய ஒரு தீர்வே இந்திய நாட்டின் பூகோள அரசியல் நலன்களுக்கும் ஏற்றதாக அமையும் என நாம் நம்புகின்றோம் எனவும் இந்தியப் பிரதமருக்கு வி.உருத்தரகுமாரன் அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfp2.html
குவைத் இலங்கைக்கு பாராட்டு
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 12:26.38 PM GMT ]
குவைத் நாட்டின் பிரதி சபாநாயகர் முபாறக் அல்-குரைனிஜ் (Mubarak Al-Khurainij), இலங்கையில் அவரது சகாவான சந்திம வீரக்கொடியை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவரின் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது அல்-குரைனிஜ், இரு நாட்டுக்கும் இடையிலான உறவினை பாராட்டியுள்ளார்.
இலங்கையில் அனைத்து துறைகளிலும் முக்கியமாக பாராளுமன்றக் களத்தில் ஒத்துழைப்பை வழங்குவதே அவரது பயணத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சந்திம வீரக்கொடி இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
இலங்கையில் இடம்பெறும் சில செயற்திட்டங்களுக்கு குவைத் நிதியம் (uwait Fund for Arab Economic Development ) உதவி வழங்கி வருவதற்கு பாராட்டும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. அத்துடன், குவைத் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள குவைத்திற்கு அழைப்பு  விடுத்தார் சந்திம வீரக்கொடி.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfp3.html

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!- தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2014, 10:50.14 AM GMT ]
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார்.
காலை 11 மணிக்கு டெல்லி வந்த ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லம் சென்றார். அவருக்கு மோடியை சந்திக்க பகல் 1 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி செல்ல நேரிட்டது.
இதன்காரணமாக மோடி - ஜெயலலிதா இடையேயான சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஏற்கனவே குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிற்பகல் 2.45 மணிக்கு சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, தமிழகத்திற்கு தேவையான நிதிகள், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம், ஜெயலலிதா கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் மின்வெட்டு இருக்காது என முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே, அறிவித்து இருக்கிறார். எனவே, இனிமேல் மின்வெட்டை சமாளிப்பதற்காக தமிழகத்திற்கு அதிக அளவில் மின்சாரம் வழங்கவும் மோடியிடம் கோரிக்கை விடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவர் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ம் இணைப்பு
தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.
இலங்கை பிரச்சினை குறித்து, அக்கடிதத்தில். ஜெயலலிதா,
  • இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்,
  • தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்,
  • பாக் நீரிணையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்,
  • 1974, 76ஆம் வருட ஒப்பந்தங்களை மத்திய அரசு ரத்துசெய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும்,
என்றெல்லாம் கோரியிருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTXLZfp1.html

Geen opmerkingen:

Een reactie posten