வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் தெற்குப் பகுதியில் மக்கள் குடியிருக்க அனுமதிக்கப்படாத பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, பொதுமக்கள் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெளிச்சவீட்டு வீதியைச் சேர்ந்த தொம்மைப்பிள்ளை (வயது 72) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் சுமார் ஒரு வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgr2.html
Geen opmerkingen:
Een reactie posten