[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:54.30 PM GMT ]
இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரக்கே விஜித தேரரை மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அசாத் சாலி சென்று பார்வையிட்டுள்ளார்.
ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவரும் மஹிங்கனை பிரதேச சபையின் உறுப்பினருமான வட்டரக்கே விஜித தேரர், பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகாமையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த போது கண்டு பிடிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs0.html
40,000 பொது மக்களின் கொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை பதில் கூறுமா?- இன்னர் சிட்டி பிரஸ்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 03:25.55 PM GMT ]
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் வானொலி தினமாகும்.
இந்த தினத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இதில், இறுதி யுத்தம் இடம்பெற்ற போது இலங்கையின் இராணுவத்தினரால் 40, 000க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த விடயம் குறித்து பல தடவைகள் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது.
ஆனால் ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இனியாவது இதற்கான பதிலை ஐக்கிய நாடுகள் சபை வழங்குமா? என்று அந்த ஊடகம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs1.html
Geen opmerkingen:
Een reactie posten