தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

கோத்தாவின் அரசியல் வரவு வட-கிழக்கு ஆபத்து

மாணவர்கள் இருவரைக் கடத்திய டிப்பர் சாரதி!

கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரைக் கடத்திய டிப்பர் சாரதி திரியந்தனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. சம்பவம் பற்றித் தெரியவருவதாவது கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆலங்குளப் பகுதியைச் சேர்ந்த க.சஞ்சே (வயது 12), இ.நிரோன் (வயது 14) ஆகிய இருவருமே கடத்தப்பட்ட சிறுவர்களாவார்.


டிப்பர் சாரதியும் அவர்களை ஏற்றிக் கொண்டு சென்று அநுராதபுரம் தாண்டிச் சென்ற போது அச் சிறுவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். உணவுற்காக கடை ஒன்றில் டிப்பரை நிறுத்திய போது இரு சிறுவர்களும் ஓடித் தப்பியுள்ளனர். இரவு நேரத்தில் வழி தெரியாது தடுமாறிய சிறுவர்கள் வீதியால் வந்த இராணுவத்தினரிடம் வழி கேட்டுள்ளனர். சந்தேகம் கொண்ட இராணுவச் சிப்பாய் இருவரையும் அருகிலிருந்த பிரியந்தனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்களை விசாரித்த பொலிஸார் டிப்பர் சாரதியைக் கைது செய்ததோடு பெற்றோருக்கு தகவலைத் தெரியப்படுத்தி இரு சிறுவர்களையும் இன்று அவர்களிடம் ஒப்படைத்தனர். 
kathirk
http://www.jvpnews.com/srilanka/72129.html

கத்திக்குத்துக்கு இலக்காகி கணவன் – மனைவி காயம்

இன்று இரவு 8 மணியளவில் கச்சாய் தெற்குப் பகுதியில் கத்திகள், பொல்லுகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து திருட முற்பட்டபோது வீட்டில் உள்ளவர்கள் கூக்குரலிடவே வீட்டில் இருந்த கணவன் – மனைவி ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் அம்பலவாணர் வேலுப்பிள்ளை (வயது 71) அவரது மனைவியான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை (வயது 63) ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/72126.html

கோத்தாவின் அரசியல் வரவு வட-கிழக்கு ஆபத்து

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வந்தால், வடமாகாணம் காஸாவுக்கு ஒப்பானதாக மாறிவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படுவதால், அவரை எதிர்த்து எந்த அமைச்சர்களும் கதைக்க மாட்டார்கள். தற்போது இருப்பதை விட மிகவும் மோசமான அமைச்சரவை ஒன்று உருவாகும். தென்னிலங்கை வெலிவேரியவை போலவும், வடக்கும், கிழக்கும் காஸாவை போன்றும் நடத்தப்படும். மனித உரிமைகளுக்கு மதிப்பே இல்லாமல் போகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/72118.html

Geen opmerkingen:

Een reactie posten