தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியில் புலிகளின் தலைவர் இருந்தாராம்??

கிளிநொச்சியில் காக்கா கடைச்சந்திக்கு அண்மையாக ஏ-9 வீதியோரம் இருந்த பெரிய நீர்தாங்கி போர்காலத்தில் பெரிதும் நீர்விநியோகத்திற்கு பயன்பட்டுவந்தது.

2009 போரின் போது குண்டுவவைத்து தகர்க்கப்பட்டு வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியை சுற்றி மதில் கட்டிய இலங்கை இராணுவம் அந்த நீர்தாங்கியை தென்னிலங்கையில் இருந்துவரும் மக்களை ஏமாற்றுவதற்கும் தமது வீரப்பிரதாபங்களை சொல்லவும் இந்த உடைந்து வீழ்ந்த நீர்த்தாங்கியை காட்சிப் பொருளாக்கியுள்ளனர்.
இந்த நீர்தாங்கிக்குள்தான் பிரபாகரன் இருந்ததாக சிங்கள மக்களுக்கு சிப்பாய்கள் சொல்ல அதை வேதமென நம்பி அவர்களும் பூரித்துப்போயினர். அழகான கிளிநொச்சியில் வடுவாக இருக்கும் அந்த நீர்த்தாங்கியை அகற்றுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கோரியுள்ளார்.
கிளிநொச்சிமாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நீர்த்தாங்கிக்காணி நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கின்றது.
இதன் காரணமாக அங்கு அமைக்கப்படவேண்டிய புதிய கிளிநொச்சிக்கான புதிய நீர்தாங்கியை இரத்தினபுரம் வீதியில் ஒரு பள்ளக்காணியில் பாடசாலைக்கு சொந்தான நிலத்தில் அமைக்கப்படுகின்றது. அக்காணியில் ஒரு மாவட்ட நூலகம் அமைப்பதற்கான ஆலோசனை முதலில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படியான கூட்டங்களில் எடுப்பட்ட முடிவுகள் பல நிறைவேற்றப்படவில்லை.


குறிப்பாக இராணுவத்தோடு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் உடைந்து கிடக்கும் நீர்த்தாங்கியை போர்ச்சின்னமாக காட்சிப்பொருளாக மாற்றி இருக்கும் நிலைWater-TankWater-Tank-01Water-Tank-02

Geen opmerkingen:

Een reactie posten