US-Arme
US-Arme-01US-Arme-02US-Arme-03US-Arme-04ஐந்து வருட காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத்தினால் பயணக் கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதால் அமெரிக்காவே மகிழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க வீரரான பேர்க்டால் என்பவரின் விடுதலை, ஐந்து தலிபான் இயக்கத்தினரை தலிபான்களிடம் கையளித்ததன் மூலம் சாத்தியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் மிகவும் முக்கிய எதிரிகளான தலிபான் இயக்கப் புரட்சிக்காரர்களில் ஐந்து பேரும், குவாண்டனாமோ சிறைச்சாலையில் இதுவரை காலமும் சிறைவைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டதாக நம்பப்பட்ட ராணுவவீரரை விடுதலை செய்யும் வேலைத் திட்டத்தை, பென்ரகன் தொடர்ந்து கையாண்டு வந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.
பேர்க்டாலின் கடத்தல் அமெரிக்க அரசியலில் பல சந்தேகங்களையும், வதந்திகளையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. தலிபான் இயக்கம் பற்றிய தவறான எண்ணத்திலிருந்து விடுபட்ட பேர்க்டால், தலிபான் இயக்கத்தின் கைகளில் தானாக சரணடைந்திருக்கக் கூடுமெனும் வதந்திகள் பரப்பப்பட்டு இருந்தமை நினைவு கூரப்பட்டுள்ளது.
பேர்க்டால் அமெரிக்க ராணுவத்திலிருந்து தப்பி ஓடிய துரோகியா அல்லது புகழுக்குரிய வீரனா எனும் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டிய கதைகள் கடந்த May மாதத்தின் CBC செய்திகளில் பரபரப்பாக வெளிவந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் அமெரிக்கா சீருடை அணிந்த தன் நாட்டுப் பிரஜைகளைக் கவனியாது விடுவதென்பது இடம் பெறாதென அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலில் பல சர்ச்சைகள் காணப்படினும், பேர்க்டாலின் பெற்றோர், தம் மகனின் விடுதலையிட்டு பெருமகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.