தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 juni 2014

இலங்கைக்கு கோபி அனான் வரமாட்டார்! புரளி கிளப்பும் ஊடகங்கள்

யாழ்.குடாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய வேவு விமானம்..

யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றின் மேற் கூரையினிலிருந்து மீட்கப்பட்ட அந்த விமானம் தற்போது யாழ்.பொலிஸார் வசமுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது எந்த நாட்டினது வேவு விமானமென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. எனினும் இது இலங்கை விமானப்படைக்கு சொந்தமானதென்ற தகவல்கள் ஏதும் கிட்டியிருக்கவில்லை.


விடுதி நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட தகவலையடுத்தே இது மீட்கப்பட்டதாக மேலும் தெரியவருகின்றது. வேவு நடவடிக்கைகளிற்கு பயன்படுத்த குறித்த வேவு விமானம் செயலிழந்து கீழே வீழ்ந்திருக்கலாமென நம்பப்படுகின்றது. தயாரிப்பு வகைகள் அடிப்படையில் இது சீன நாட்டினதாக இருக்கலாமென மற்றொரு தகவல் கூறுகின்றது. மேலதிக தகவல்களிற்காக இலங்கை விமானப்படையினது உதவி நாடப்பட்டுள்ளதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.FelitFelit-01Camara-Jaffna
http://www.jvpnews.com/srilanka/71713.html

இலங்கைக்கு கோபி அனான் வரமாட்டார்! புரளி கிளப்பும் ஊடகங்கள்

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணையின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் கோபி அற்றா அனான் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. கொபி அனான் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராக இருந்தவர். ஆனால் இந்த விசாரணையின் அறிக்கை, அவருக்கு கீழ் பணியாற்றிய மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.

எனவே இதனை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கான தலைமையை, தற்போதையை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்னும் ஓரிரு மாதங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக விசாரணை நடத்தி இருந்த மர்சூகி தருமான் அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நிலையில் நவநீதம்பிள்ளையே சிறிலங்காவுக்கு எதிரன விசாரணை குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/71710.html

Geen opmerkingen:

Een reactie posten