தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு விசாவை வழங்க ஆஸி. தீர்மானம்!


அளுத்கம சம்பவங்களுடன் தொடர்புடைய 13 வன்முறையாளர்கள் விடுதலை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 10:47.40 AM GMT ]
அளுத்கம பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் கைது செய்த 13 பேர் அரசியல் உத்தரவுகளுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டமை குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அதிருப்தியடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அளுத்கம நகரில் கடந்த 15ம் திகதி இரவு முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் உத்தரவின் பேரில், களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் கைது செய்திருந்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருக்கும் போது, பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரும், அரச புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியுமான ஒருவர் 13 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சந்தேக நபர்களை விடுதலை செய்ய மறுத்த இந்திரன், சந்தேக நபர்களுக்கு தாக்குதலுடன் தொடர்புள்ளமை சாட்சியங்களுடன் உறுதியாகியுள்ளதால், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், களுத்துறையில் பிரதமர் தலைமையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூடி கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில், 13 சந்தேக நபர்களை விடுதலை செய்யாது போனால், மீண்டும் வீதியில் இறங்க போவதாக பிக்குகள் சிலர், அமைச்சர்களுக்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு, அங்கிருந்த முக்கியமான அமைச்சர் ஒருவர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்னவுக்கு உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் சந்தேக நபர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு காமினி நவரட்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர். வீ. இந்திரனுக்கு உத்தரவிட்டார்.
அதனை முற்றாக நிராகரித்த இந்திரன், சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவதை தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார். இதன் பின்னர், காமினி நவரட்னவுக்கும் வீ. இந்திரனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்ய போவதாக இந்திரன் கூறியுள்ளார்.
இதன் பின்னர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி சந்தேக நபர்களை விடுதலை செய்த, காமினி நவரட்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரனுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் குற்றச்சாட்டு பத்திரம் ஒன்றையும் கையளித்துள்ளார்.
இதனடிப்படையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், வீ. இந்திரன், அளுத்கம மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளின் கண்காணிப்பு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு விசாவை வழங்க ஆஸி. தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 11:02.49 AM GMT ]
அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்காலிக பாதுகாப்பு விசாக்களை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகிறது.
அகதி அந்தஸ்து நிரூபிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிரந்த விசாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது தவறானதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் செனட் சபையில் முடக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வருடமொன்றில் 2,773 விசாக்களை மாத்திரம் வழங்குதெனத் தீர்மானித்திருந்தார்.
இந்தத் தீர்மானம் செல்லுபடியற்றதென உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டது தானே அமைச்சர் மொரிசன் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதன் பிரகாரம், முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்ட்டின் ஆட்சிகாலத்தில் அமுலில் இருந்த தற்காலிக பாதுகாப்பு விசா நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
தற்காலிக பாதுகாப்பு விசாவைப் பெறும் ஒருவர், தமது அகதி அந்தஸ்து மீள்பரிசீலனை செய்யப்படும் வரையில் அவுஸ்திரேலியாவில் மூன்று வருடங்கள் தங்கியிருக்கலாம்.
எவ்வாறாயினும், இந்த தற்காலிக பாதுகாப்பு விசா நடைமுறையானது அகதிகளுக்கு உளவியல் ரீதியான தாக்கங்களை மேலும் அதிகரிக்கும் என பசுமைக்கட்சி மற்றும் அகதிகளுக்கான குழுக்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றமில்லையென தெரிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கம், படகுகளில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வருபவர்களுக்கு நிரந்தர வதிவிட விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten