தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 juni 2014

ஆறுமுகன் தொண்டமானின் எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளமாட்டோம்: வைத்திய அதிகாரிகள்!


இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சம்பிக்க ரணவக்க: பௌத்த அமைப்புகள் பிரசாரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 11:27.41 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என பொதுபல சேனா உட்பட பல பௌத்த அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.
நாட்டை பல்வேறு சவால்களில் இருந்து காப்பற்ற இலங்கைக்கு சிங்கள ஜனாதிபதி அவசியம் என பொதுபல சேனா அமைப்பு ஆதரவு வழங்கும் சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மோதல்களுக்கு முன்னதாக அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியிருந்த, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சிங்கள ஜனாதிபதி ஒருவர் நாட்டின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.
அதேவேளை அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் பொதுபல சேனாவால் ஏற்பட்ட மோதல் சம்பவங்களை அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் நியாயப்படுத்தியிருந்தார்.
முஸ்லிம்களே சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆறுமுகன் தொண்டமானின் எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளமாட்டோம்: வைத்திய அதிகாரிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 11:45.13 AM GMT ]
கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் எதிர்காலத்தில் விடுக்கப்படக் கூடாது என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் உறுதியளிக்கப்படும் வரை, கொட்டகல பணிமனைக்கு வைத்திய அதிகாரிகள் சமூகமளிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கொட்டகலை சுகாதார பணிமனையில் ஸ்தம்பிதமடைந்துள்ள சேவையால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அமைச்சா் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பு விடுக்கின்ற எந்தவொரு கூட்டத்திற்கும் வைத்தியா்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் 22.06.2014 அன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
அதையும்மீறி வைத்திர்கள், அமைச்சர் அழைப்புவிடுக்கும் கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் பட்சத்தில் அவா்களுக்கு எதிராக சங்கத்தின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து, நுவரெலியா மாவட்டதின் 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை சேர்ந்த சுமார் 25 சுகாதார வைத்திய அதிகாரிகள் கடந்த ஐந்து நாட்களாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten