நாவாந்துறை காமல் பள்ளி வாசல் தாக்கப்பட்டுள்ளது
தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய நிலையில் காணப்பட்டது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
யாழ். மானிப்பாய் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஜன்னல்கள் விஷமிகளால் சேதமாக்கப்பட்டன!
யாழ் கமால் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பள்ளிவாசலின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியிலுள்ள முஸ்லிம் வட்டாரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசலே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இந்தச் சம்பவம் நள்ளிரவு (20) 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
ஜன்னல்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாகவும், உடனடியாக பொதுமக்கள் அவ்விடத்தில் குவிந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் வந்து நிலைமையை பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ள எம்.ஓ வீதியில் தினமும் இராணுவத்தினரின் ரோந்து செல்வது வழமை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து தமிழர்கள் ஒன்றிணைந்து அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.




http://www.jvpnews.com/srilanka/74087.html
மனைவி ஆபத்தான நிலையில்! அவரைக் காப்பாற்ற தமிழகம் வந்தேன் முல்லை குடும்பஸ்தர்..
இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் படகு மூலம் இலங்கையில் இருந்து வந்ததாக அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலோர காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்துறையினர் இலங்கையில் இருந்து வந்தவர்களை முகுந்தராயர் சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தனது மனைவி செல்வி குரூஸ் கிட்னி பாதிக்கப்பட்டுள்ளார்., இலங்கையில் தொழில் மற்றும் வேலை வாயப்பு கிடைக்க மிகவும் சிக்கலாக இருருக்கிறது. இதனால் மனைவி செல்வி குரூஸ்க்கு சிகிச்சை அளிக்க போதுமான பணம் கிடைக்கவில்லை. எனது உறவினர் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கின்றனர்.
அவர்களின் உதவியுடன் இங்கு வந்த சிகிச்சை பெறலாம் என்பதால் தலைமன்னாரில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து படகு மூலம் தனுஸ்கோடிக்கு வந்தோம்.- என்று அந்தோணி குரூஸ் தெரிவித்தார். இவர்களிடம் மத்திய, மாநில உளவுப்பிரிவு பொரிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.அத்துடன் கடலோர காவல்துறையினர் மண்டபம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
http://www.jvpnews.com/srilanka/74104.html
Geen opmerkingen:
Een reactie posten