[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 12:48.15 PM GMT ]
நாட்டின் சட்டத்திற்கு தான் அடிபணிந்தவர் அல்ல என்பதை காட்டும் வகையில் தலைக்கவசம் அணியாது அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றிருக்கலாமோ என்று இதனைக் கண்ட பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் தொண்டமானுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரிகள் நேற்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர்.
தொண்டமான், கொட்டகலை வைத்திய அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற காரணத்தின் அடிப்படையில் இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு தீர்வு காணப்படவில்லை என்பதால், வைத்திய அதிகாரிகள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahr1.html
வட்டரக்க விஜித தேரர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 04:27.00 AM GMT ]
இனந்தெரியாத நபர்கள், விஜித தேரரை கடத்திச் சென்று தாக்கியுள்ளனர்.
பாணந்துறை ஹிரனம பாலத்திற்கு அருகாமையில் விஜித தேரர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
தேரரின் தேசிய அடையாள அட்டை அருகாமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த விஜித தேரர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தேரரிடம், தற்போது வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaix3.html
Geen opmerkingen:
Een reactie posten