தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

ஐநா விசாரணையின் போது பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் விசாரிக்கப்படும்!



நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்க மறியல்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 12:28.29 PM GMT ]
இலங்கைக் கடற் படையினரால் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரையும் கடற்படையினர் இன்று காலை காங்கேசன்துறைக்குக் கொண்டுவந்து நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம் கையளித்திருந்தனர்.
நீரியல்வளத்துறை அதிகாரிகள் இவர்களை இன்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான் இவர்களை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahrz.html

ஐநா விசாரணையின் போது பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் விசாரிக்கப்படும்!
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 08:05.48 AM GMT ]
அனைத்துலக விசாரணையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் எனும் தலைப்பில் ஐநா உள்ளக அறையில் இரண்டாவது செயலமர்வு இடம்பெற்றது.
இதில் பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் ஹியுகோ ஸ்வையர் (Rs Hon Hogo Swire Mp UK Minister of state for foreign affairs)  கலந்து கொண்டதுடன் பல மனித உரிமை ஆர்வலர்கள் தமிழர் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahp1.html

Geen opmerkingen:

Een reactie posten