தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

செய்தி இணையத்தளங்கள் மீதான தடை - நாளை பாராளுமன்றத்தில் விவாதம்

தரகுப் பணம் கேட்டதால் இலங்கையைக் கைவிட்ட கூகிள்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 08:44.13 AM GMT ]
வெளிநாட்டவர்கள் அந்நிய செலாவணியுடன் ஏதாவது ஒன்றை செய்ய இலங்கைக்கு வருகின்றனர். அவர்களிடம் தரகு பணம் கேட்டால் அவர்கள் நாட்டில் இருப்பார்களா என அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கூகிள் இலங்கைக்கு வந்திருந்தால் நாட்டுக்கு கோடிக்கணக்கில் நன்மை ஏற்பட்டிருக்கும். இலங்கையில் உள்ள பல பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
மூன்று அமெரிக்கர்கள் இலங்கைக்கு வந்து கூகிள் நிறுவனத்தின் கிளை ஒன்றை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனைத்தையும் பேசிய பின்னர், தரகு பணம் கேட்டதால், அந்த நிறுவனத்தினர் இலங்கையில் கிளையை ஆரம்பிக்கும் எண்ணத்தை கைவிட்டு திரும்பிச் சென்று விட்டனர். இப்படித்தான் பல முக்கிய நிறுவனங்கள் இலங்கைக்கு வந்து திரும்பி செல்கின்றன.
சீனாவில் நடைபாதைகளில் இருப்பவர்களே இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தற்போது சீனாவின் காலனியாவிட்டது என அசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.

http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeo0.html

உலகில் அதிகம் கொலைகள் நடக்கும் இடம் தங்காலை!- சனத் ஜயசூரிய மைதானத்தின் பெயரை மாற்ற வேண்டும்! - மங்கள சமரவீர
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 10:34.27 AM GMT ]
உலகில் கடந்த காலத்தில் அதிகளவான கொலைகளை நடைபெற்ற நகரம் சிக்காகோ எனவும் தற்போது உலகில் அதிகமாக கொலைகள் நடக்கும் இடமாக தங்காலை மாறியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
நாட்டின் இன்றைய அரசாங்கத்தின் தலைவர்களை எதிர்க்கும் நபர்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பிச் செல்வதை காணமுடிகிறது.
தங்காலை பஸ் நிலையம் அதியுயர் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் ஒரு இடம்.
அங்கிருந்த பஸ் நடத்துனரை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பிச் சென்றுள்ளார்.
தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கும் கொலையாளிகள் யார் என்பது தெரியும்.
2012 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஊழல் மற்றும் கொலை பற்றிய அறிக்கையில் தெற்காசியாவில் அதிகமாக கொலைகள் நடக்கும் நாடு இலங்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் கொலைகள் தொடர்பான அறிக்கையின் படி பங்களாதேஷில் 2.7 வீதமும், மாலைத்தீவில் 1.6 வீதமும், நேபாளத்தில் 2.8 வீதமும் இந்தியாவில் 3.2 வீதமும் இலங்கையில் 3.8 வீதமும் கொலைகள் நடக்கின்றன.
இலங்கையில் தற்பொழுது இடம்பெறும் கொலைகளை நோக்கும் போது ஐக்கிய நாடுகளின் அடுத்த ஆண்டு அறிக்கையில் இலங்கை உலகில் முதலிடத்திற்கு வந்து விடும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
வன்முறை அரசியல்வாதி சனத் ஜயசூரியவின் பெயரில் இருக்கும் மைதானத்தின் பெயரை மாற்ற வேண்டும் - மங்கள சமரவீர
இலங்கையின் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ள மாத்தறை கிரிக்கெட் மைதானத்தின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மாத்தறை மேயரிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சராக இருந்த போது புனித சேவியர் கல்லூரிக்கு சொந்தமான மைதானத்திற்கு சனத் ஜயசூரியவின் பெயரை சூட்டினேன்.
சனத் ஜயசூரியவிற்கு இருந்த ஐக்கிய தேசியக் கட்சியுடனான பின்னணியை கவனத்தில் கொள்ளாது விளையாட்டு வீரரை கௌரவிப்பதற்காக அவரது பெயரை சூட்டினேன்.
சனத் ஜயசூரிய தற்போது வன்முறை அரசியல்வாதியாக மாறியுள்ளதால், தொடர்ந்தும் அவரது பெயரை மைதானத்திற்கு வைத்திருப்பது கல்லூரிக்கும் மாத்தறை மக்களுக்கு செய்யும் அவமரியாதை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeo5.html
செய்தி இணையத்தளங்கள் மீதான தடை - நாளை பாராளுமன்றத்தில் விவாதம்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 11:55.24 AM GMT ]
இலங்கையில் செய்தி இணையத்தளங்களை பார்வையிட ஏற்படுத்தப்பட்டுள்ள தடை மற்றும் குறுக்கீடுகள் தொடர்பில் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த மே 23 ஆம் திகதி சபை ஒத்திவைக்கும் போது, முன்வைத்த யோசனைக்கு அமைய இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
செய்தி இணையத்தளங்களை பார்வைிட ஏற்படுத்தப்பட்டுள்ள தடை காரணமாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரவு யாப்பில் வழங்கப்பட்டுள்ள சாதாரண நியாயங்களுக்கான உரிமைகள், பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், சட்டரீதியாக தொழில் செய்யும் உரிமை உள்ளிட்ட சுதந்திரங்கள் மீறப்பட்டுள்ளதாக அத்தநாயக்க தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையானது இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஸ்ரீலங்கா மிரர், லங்கா ஈ நியூஸ், லங்கா நியூஸ் வெப், லங்கா கார்டியன், கொழும்பு டெலிகிராப், ஜெப்னா முஸ்லிம், தி இண்டிபென்டன் உட்பட பல செய்தி இணையத்தளங்கைளை வாசகர்கள் பார்வையிட முடியாத படி தடை செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்டுள்ள இணையத்தளஙகளில் ஸ்ரீலங்கா மிரர் மற்றும் தி இண்டிபென்டன் ஆகிய இணையத்தளங்கள் மட்டுமே இலங்கையில் இருந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZepy.html

Geen opmerkingen:

Een reactie posten