தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

கைதாகியுள்ள நந்தகோபன் உதவியோடு 4,000 பேரது பட்டியலை தயாரிக்கும் அரசு !

கம்பஸ் பிள்ளையின் கழுத்தில் கை வைத்த கயவர்கள்: மெமரி காட்டை பறிகொடுத்தார்கள் !
05 June, 2014 by admin
யாழ்.கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று புதன்கிழமை (04) நண்பகல் தனியே நடந்து சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நிலைதடுமாறி வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளை, அவ்விடத்தில் கைவிட்டு தப்பியோடியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். சங்கிலியின் ஒரு பகுதி மாணவியின் கையிலேயே இருந்ததாகவும் குறித்த மோட்டார் சைக்கிளையும், அதன் அருகிலிருந்து மெமறிக் கார்ட் மற்றும் தொலைபேசி கவர் ஆகியவற்றினை பொலிசார் மீட்டதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. 

குறித்த பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் முடிவுற்று தான் தங்கியிருந்த பிரம்படியிலுள்ள வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது,; மோட்டார் சைக்கிளில பின்னால் வந்த இருவர் சங்கிலியினை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதன்போது மாணவி கூக்குரலிடவே அங்கு பொதுமக்கள் வருவதினை அவதானித்த சங்கிலித் திருடர்கள் நிலைதடுமாறி வீழ்ந்ததால் மோட்டார் சைக்கிளினை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு; தப்பி ஓடியுள்ளனர். தேவேளை மோட்டார் சைக்கிளில் இருந்து திருடர்கள் விழுந்தவேளை அவர்களில் ஒருவரது மோபைல் போனும் கீழே விழுந்துவிட்டது. இருப்பினும் அதனைப் பொறுக்கிக்கொண்டு அவர்கள் ஓடி மறைந்துவிட்டார்கள்.

ஆனால் அதன் கவர் மற்றும் மெமரி காட் ஆகியன அவ்விடத்திலேயே இருந்துள்ளது. பொலிசார் அனைத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். சங்கிலி திருடவந்து பேரிழப்புடன் ஓடிய திருடர்கள் இவர்களாகதான் இருக்க முடியும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6931
கைதாகியுள்ள நந்தகோபன் உதவியோடு 4,000 பேரது பட்டியலை தயாரிக்கும் அரசு !
05 June, 2014 by admin
கடந்த ஏப்பிரல் மாதம் மலேசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு செல்லும்வேளை, நந்தகோபன் என்னும் நபரை அன் நாடு மீண்டும் மலேசியாவுக்கு நாடு கடத்தியது. புலிகளின் முன் நாள் உறுப்பினரும், வெளிநாடுகளில் உள்ள பல தமிழர்களோடு தொடர்பில் இருந்தவருமான நந்தகோபனை, மலேசிய அரசு இலங்கைக்கு பின்னர் நாடு கடத்தியது. அவரே மலேசியாவில் தங்கியிருந்த 3 முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும் காட்டிக்கொடுத்தார். இவர் தற்போது பூசா முகாமில் உள்ளார். இவர் கொடுத்துவரும் தகவலுக்கு அமைவாக புலம்பெயர் நாடுகளில் உள்ள சுமார் 4,000 ஈழத் தமிழர்களது பெயரை இலங்கை அரசு பட்டியலிட்டு வருகிறது என்று கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இலங்கை அரசு வெளிநாடுகளில் உள்ள 16 அமைப்பை தடைசெய்தது மட்டுமல்லாது 400 தமிழர்களது பெயரையும் வெளியிட்டு, அவர்கள் இலங்கை வரமுடியாது என்றும் அறிவித்தது. அதுபோல தற்போது மேலதிகமாக சுமார் 4,000 பெயர்களை அடங்கிய பட்டியலை அவர்கள் தயாரித்து வருகிறார்கள். அதனை வெகு விரைவில் வெளியிடவும் உள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6929

Geen opmerkingen:

Een reactie posten