[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 12:05.55 PM GMT ]
இன்று காலை 7.15 மணி தொடக்கம் 8.00 மணி வரையில் பெருமளவான மாணவர்களும் பெற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“தகுதி இல்லாத அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்று” என்ற கோஷத்தினை எழுப்பியவாறு பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அதிபர் தடையாக இருப்பதாகவும் தற்போதைய அதிபரின் நடவடிக்கையால் பாடசாலையின் கல்வி சீரழிந்து செல்வதாகவும் பாடசாலை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், “ஆளுமை இல்லாத அதிபர் வேண்டாம், திறனற்ற அதிபர் வேண்டாம், மாணவர்களை புறந்தள்ளும் அதிபரை நிறுத்து” போன்ற அதிபருக்கு எதிரான சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு வலய நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் குருகுலசிங்கம் ஆகியோர் பெற்றோருடன் கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களை பாடசாலையினுள் செல்லுமாறு கேட்டுக்கொண்ட நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற ஆசிரியர்கள் வரவு இடாப்பில் கையொப்பமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.நிலாகரன்,
அதிபரை இடமாற்றுமாறு வலய, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு பல்வேறு தடவைகள் அறிவித்தும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பாடசாலையின் இணைப்பாட விதான செயற்பாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.
பாடசாலையில் மாணவர்கள் தூங்கும் நிலையே உள்ளது. கடந்த காலத்தில் இருந்த நிலை பின்நோக்கி செல்கின்றது. அதிபர், ஆசிரியர்களை சரியான முறையில் கண்காணிப்பதில்லை.
ஒரு சில ஆசிரியர்களை வைத்துக்கொண்டு சிரேஸ்ட ஆசிரியர்களை பின்தள்ளும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் என்றார்.
இதேவேளை பாடசாலைக்கு வருகைதந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பாடசாலை சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு பாடசாலை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று தங்களது பிரச்சினைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடி மகஜர் ஒன்றினை வழங்குமாறு பெற்றோரிடமும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் பாடசாலையில் தமது கடமையினை ஒழுங்காக நிறைவேற்றாமல் உள்ள தொழிற்சங்கவாதிகளாக காட்டிக்கொள்ளும் சில ஆசிரியர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgv6.html
மீனவர் கைது நீடித்தால்....! பாஜக இலங்கைக்கு எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 02 யூன் 2014, 12:01.54 PM GMT ]
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கை பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் தான் ராஜபக்ஷ பிரதமரின் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டார். ஆனால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் இலங்கைக்கு எந்த மொழியில் கூறினால் புரியுமோ அந்த மொழியில் பதிலடி கொடுக்க மத்திய அரசு தயங்காது எனவும் எச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTWLZgv5.html
Geen opmerkingen:
Een reactie posten