தேரர் படுகொலை: சந்தேகநபரின் பாதணிகள் மீட்பு
இந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் பாதணி ஜோடி,சிகரெட் மற்றும் மதுபான போத்தலொன்று விஹாரை வளாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/74197.html
நான் குழப்ப வில்லை வெளிநாட்டு குழப்புகிறது மகிந்தர் பல்ரி
முன்னதாக, முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை, பதுளைக்கு அவசரமாக அழைத்துப் பேசியிருந்தார் மகிந்த ராஜபக்ச. அதையடுத்து, நடந்த கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போன்று சகோதர உணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மோசமான சூழலைப் புரிந்து கொண்டு, நாட்டில் சமூகங்களுக்கு இடையில் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவரையும் சட்டத்தில் கையில் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறையினருக்கும் படையினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
சட்டத்தை மீறுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதனை அதிகாரிகள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74192.html
இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதம் மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு…
இதுதொடர்பாக, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத்துக்கு எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை.
நாடுமுழுவதிலும், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டு வருகிறது. இத்தகைய குழுக்கள் செயற்படுவது குறித்து ஆதாரங்கள் ஏதும், கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது, சிறிலங்கா மீதுான அனைத்துலக அழுத்தங்களுக்குக் காரணமாக இருக்கும் பிரிவினைவாத, புலம்பெயர் தமிழர்கள் என்ற பொது எதிரி குறித்து மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும்.
வெளிநாட்டு அரசாங்கங்கள், அனைத்துலக அமைப்புகள். அரச்சார்பற்ற நிறுவங்களின் மூலம் அவர்கள், தமது பிரதான இலக்கான தனிநாட்டை அடைய முயற்சிக்கின்றனர். அவர்கள் தான் தற்போது எமது பொது எதிரி.
இதனை விட்ட இல்லாத ஒரு விடயம் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மத, இன பேதங்களின்றி இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74189.html
Geen opmerkingen:
Een reactie posten