தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்! அனுதாபமும் தெரிவிப்பு!

ஐ.நா விசாரணைக் குழுவின் நிபுணர்கள் நியமனத்தை பிரித்தானியா வரவேற்பு
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 12:53.26 PM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு குறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் வரவேற்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு இந்த விசாரணையானது ஒரு முக்கியமான படிக்கல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்களில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நேற்று அறிவித்தார்.
விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த மார்ச் மாதம் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பில் ஸ்தாபிக்கப்பட்ட விசாரணைக்கான நிபுணர்களை நியமித்துள்ளதாக நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை நான் வரவேற்கின்றேன்.
இலங்கிலாந்து இந்த விசாரணைகளுக்கு தொடர்ந்தும் அழைப்பு விடுத்துடன் அதனை பாதுகாக்க முக்கிய பங்காற்றியது.
இந்த விசாரணையானது உண்மையை நிலைநாட்டுவதற்கும் இலங்கயைில் நல்லிணக்கத்திற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.
மார்டி அத்திசாரி, அஸ்மா ஜஹாங்கீர், சில்வியா கார்ட்ரைட் ஆகியோரை கொண்ட ஒரு வலுவான தெளிவான விசாரணைக்குழுவை மனித உரிமை பேரவை நியமித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்துடன் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் வலியுறுத்துகிறேன்.
விசாரணையில் ஈடுபடுபவர்கள், அச்சுறுத்தல் இன்றி, அச்சமின்றி விசாரணைகளைில் ஈடுபட முடியும் என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேணடும்.
அரசியல் தீர்வு, நல்லிணக்கம், நீதி, பொறுப்புக் கூறல், ஆயுத மோதல்கள் மற்றும் இன்றைய காலத்தின் கவலை தொடர்பிலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் ஊடாக தொடர்ந்தும் நான் வலியுறுத்தி வருகின்றேன்.
இலங்கையில் இந்த பிரச்சினைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான வசதிகளுக்கு உதவிகளை வழங்க பிரித்தானிய அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns1.html
ஈராக்கிற்கு பயணம் மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 01:17.30 PM GMT ]
இலங்கை வெளிவிவகார அமைச்சு ஈராக்கு பயணம் செய்வது தொடர்பான பயண அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
அந்த நாட்டின் வன்முறைகளின் விளைவாக ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் பாதுகாப்பு சூழ்நிலைகள் மோசமடைந்து வருவதை கவனத்தில் கொண்டு இலங்கை பிரஜைகள் அந்நாட்டுக்கு பயணம் செய்வது தொடர்பிலான விடயங்களை மறு அறிவிப்பு வரும் வரை கவனமாக கையாள வேண்டும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.
ஈராக்கில் தற்போதுள்ள இலங்கையர்கள், அங்கு ஏற்பட்டு வரும் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேவையான ஆலோசனைகளையும் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை +96477704847458 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் slembirq@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவும் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பிரஜைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns2.html
முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்களுக்கு வட மாகாணசபையில் கண்டனத் தீர்மானம்! அனுதாபமும் தெரிவிப்பு!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 02:18.43 PM GMT ]
முஸ்லிம் மக்கள் மீது தென்னிலங்கையில் நடத்தப்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களுக்கு வடக்கு மாகாணசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மேற்படி வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர், வெலிப்பன்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கண்டனம் தெரிவிக்கும் தீர்மா னத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அஸ்மின், வடமாகாணசபையின் 11வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த போது முன்மொழிந்திருந்தார்.
குறித்த பிரரேரணையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றைய உறுப்பினர் இந்திரராசா வழிமொழிந்த நிலையில் குறித்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மேலும் குறித்த தீமானத்தின் மீது சுமார் ஒன்றரை மணிநேரம் விவாதமும் இடம்பெற்றிருந்தது.
குறித்த தீர்மானம் தொடர்பாக அஸ்மின் உரையாற்றுகையில், ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையின் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு முன்பாகவே இந்த வன்முறைகள் நடந்தன.
இதேபோன்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முஸ்லிம்கள் மீது தாக்குதலை நடத்திய சிங்கள பௌத்த இனவாதிகளை நியாயப்படுத்தும் வகையில் ஊடகங்களில் அறிக்கை விடுத்துள்ளார்.
இதனோடு பாதிப்பு நடைபெற்ற இடத்திற்கு இலங்கையின் ஜனாதிபதி வருகை தந்து சில தினங்களேயான நிலையில் முஸ்லிம்களின் புடவை வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் கடந்த 15ம் திகதி கந்தே விகாரைக்கு முன்பாக கூடிய, சிங்கள பௌத்த இனவாதிகள் முஸ்லிம்கள் பௌத்த மதத்திற்கு எதிராக வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே சிங்கள குடிமகன் மீது அவர்கள் கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை காண்பிக்க வேண்டும் என விஷத்தை கக்கும் வார்த்தைகளை பேசிய பின்னரே, முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இது 83ம் ஆண்டு கலவரத்தைப் போன்றதொரு கலவரத்தை முஸ்லிம் மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள் என்றே நாங்கள் கருத வேண்டியிருக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சபையில் மேற்படி பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், பேரவைத்தலைவர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் சபையில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த விவாதத்தின் போது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட போது முஸ்லிம் தரப்புக்கள் மௌனம் காத்தமை தொடர்பாக பலத்த பேச்சுக்கள் எழுந்திருந்த போதும் மேற்படி பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbns4.html

Geen opmerkingen:

Een reactie posten