அண்மையில் சில தினங்களுக்கு முன்பாக குவிபெக்கில் சிறையிலிருந்தவர்கள் ஹலிக்கப்டரின் உதவியுடன் சிறையிலிருந்து தப்பித்த செயதி மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அத மட்டுமல்ல அரசியலரீதியாகவும் அது பெரும் தாக்கத்தை விழைவித்தது. கனடியச் சிறைகளின் பாதுகாப்புப் பற்றி பலதரப்பட்ட மட்டங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோன்று தப்பிச் சென்ற இருவருமே கைப்பற்றப் பட்டு விட்ட செய்தி இருக்கின்றது. தப்பித்துச் சென்ற நபர்கள் Serge Pomerleau 49, Denis Lefebvre 53, Yves Denis 35 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யூன் மாதம் 7ம் திகதி தப்பித்துச் சென்றிருக்கின்றார்கள். குவிபெக் பொலிசார் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 1;:30 அளவில் மூவரையும் ஒரு வீட்டிலிருந்து தாம் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. குவிபெக் பொலிசார் அவசர உதவிப் பிரிவுக் குழுவினருடன் இணைந்து இந்தக் கைதினை நடாத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட மூவரும் 2010ம் திகதி பொலிசாரினால் Crayfish எனப் பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின்கீழ் போதைப் பொருள் கடத்தும் நெட்வெக் என்பதன் பெயரில் கைது செய்யப்பட்டிருந்தார்கள் எனவும,; இவர்கள்மேல் குழுக்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் மட்டுமல்ல, கொலைக் குற்றச்சாட்டுக்களும் இருந்தன எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இத்தகைய குற்றங்களுக்கான விசாரணைக்கு தடுத்து வைத்திருந்த சமயம் இவர்கள் வெளியேறியிருக்கின்றார்கள் எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பிட்ட மூவரும் சிறையுடைப்பின் காரணமாக சர்வதேசரீதியாக இயங்கும் Interpol red notice list, னது பெயர்ப்பட்டியிலில் இடம்பெற்றிருக்கின்றார்கள் எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். குறிப்பிட்ட நபர்கள் சிறையிலிருந்து வெளியேறுவதற்கு முதல்நாள் நீதிபதி இவர்களுக்கான கட்டுப்பாடுகளைச் சிறிது தளர்த்தியிருந்தார் எனவும் அதைச் சாதகமாகப் பயன்படுத்திச் சாதுரியமாகச் சிறையிலிருந்து வெளியேறியிருக்கின்றார்கள் எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten