[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 02:29.58 PM GMT ]
ஏதேனும் ஓர் இனம் அல்லது மத சமூகத்தை எதிர்க்கும் வகையிலான கூட்டங்கள், போராட்டங்கள் தடை செய்யப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கோவணத்தை இறுக்கி கட்டினால் வயிற்றோட்டம் நின்றுவிடாது என்பதை போல, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சூளுரைப்பதை போல இலங்கையில் எதுவும் நடந்துவிடாது என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தூண்டும் வகையிலான தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவிற்கு அமைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட மாட்டாது.
எனினும், ஒர் இன சமூகம் அல்லது மத சமூகத்திற்கு எதிராக பகை உணர்வுகளைத் தூண்டும் கூட்டங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் நாளை கொழும்பில் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவணத்தின் இறுக்கம் வயிற்றோட்டத்தை நிறுத்தாது!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 02:44.21 PM GMT ]
இலங்கையின் அமைதியை பாதுகாப்பதற்காக, நாட்டில் சட்ட ஒழுங்குகளை முறையாக அமுலாக்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இழந்த சிங்கள வாக்குகளை மீள்நிரப்பிக் கொள்வதற்காகவே, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவை அனைத்தும் சிறந்த அறிவிப்புகள். ஆனால் இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் இயலுமையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இல்லை என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவிடமே இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாக்குகளை மீள்நிரப்பிக் கொள்ளவே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 02:39.18 PM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்தால் மேற்கத்தேய நாடுகளுடன் நல்லுறவைப் பேணி இருப்பேனே தவிர, முஸ்லிம் நாடுகளுடன் இல்லை என்று பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் வாக்கு வங்கியை மீள்நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
இந்த நிலையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பௌத்த மற்றும் சிங்கள வெறியை சிங்கள மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு, தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால்......! ஞானசார தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 02:53.13 PM GMT ]
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை சரியானது இல்லை. முஸ்லிம் நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் நல்லுறவை பேணி வருகிறது.
இதற்கு பதிலாக மேற்குலக நாடுகளுடன் சிறந்த உறவை பேணி வந்திருந்தால் தற்போது மனித உரிமைகள் சார்ந்த பல்வேறு விடயங்களில் சிக்கலை சந்தித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
முஸ்லிம் நாடுகளுடனான உறவின் பாதிப்பை இலங்கை சந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten