எல்லை கடந்து வந்து 3 நகரங்களை சுனித் தீவிரவாதிகள் ஈராக்கில் கைப்பற்றியிருக்கின்றார்கள்:
சுனித் தீவிரவாதிகள் சிரிய எல்லைப்பகுதியால் ஈராக்கிற்குள் நுளைந்து 3 நகரங்களை சனிக்கிழமை கைப்பற்றியிருக்கின்றார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையல் ஈராக்கிய பிரதமர் மாலிக் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்வது கேள்விக்குறியாகக் காணப்டுகின்றன என அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்;;ற்னர்.
சனிக்கிழமை ஈராக்கில் Qaim, Rawah, Anah ஆகிய பகுதிகள் சுனித் தீவிரவாதிகளின் கைகளில் விழுந்திருக்கின்றனவெனவும் இவைகளில் Rawah, வில் காணப்படுகின்ற Euphrates எனும் நதிமீது பாரிய அணையொன்று 1986ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கின்றது எனவும் தெரியவருகிறது. அங்கு 1,000 மெக்காவாட்ஸ் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய அலை அமைந்துள்ளதெனவும் அது தீவிரவாதிகளினால் பாதிக்கப்படுமாயின் பாரியளவிலான வெள்ளத்தினால் அழிவ எற்படுகின்ற அவல நிலை தோன்றக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் ஈராக்கிய இராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி குறிப்பிட்ட பிராந்தியத்தில் அந்த அணையை சுனித் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 2,000 ஈராக்கியத் துருப்புக்கள்; துரிதமாக அங்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது.
ஈராக்கியப் பொலிசார், மற்றும் இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் கிட்டத்தட்ட 30 ஈராக்கியத் துருப்புக்களைக் கொன்று பின்பு, சனிக்கிழமை சுனித் திவிரவாதிகள் எல்லை கடந்து வந்து பாக்டாக்கிற்கு மேற்கில் 320 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நகரைக் கைவசமாக்கியிருக்கின்றார்கள் எனத் தெரிகிறது.
ஷியா இனத்தவரின் பெருமளவில் உள்வாங்கியுள்ள மாலிக் 2006லிருந்து பதவியிலுக்கின்றார் எனவும் இவர் பதவிக்கு வந்த பின்பு ஈராக்க அரசானது வடபகுதியில் அதிகளவு ஆதிக்கம் செலுத்தியிருந்து சுனி தீவிரவாதிகளுடன் முரண்படத் தொடங்கியிருக்கின்றது எனவும் தெரியவருகிறது.