பேருவளை, அளுத்கம வன்முறைகளை பயன்படுத்தி, ஏனைய பகுதிகளிற்கும் அந்த தீயை பரப்பிவிட சிலர் முயன்றனர். எனினும், புலனாய்வு சேவையினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர்கள் முறையாக நடந்து கொண்டு, திட்மிடப்பட்ட அனர்த்தங்களை கட்டுப்படுத்தியுள்ளனர் என்று கூறிய பிரிகேடியர் ருவாண் வணிகசூரிய, மேற்குலக நாடு ஒன்றின் தூதுவராலயத்தில் ஒரு ரகசிய கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் கலந்துகொண்ட சிலர், புலனாய்வு துறையில் ஒரு குழுவில் வேலைபார்க்கும் நபர்களின் பெயர்களை எடுத்துச் சென்று கொடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். இதனூடாக பேருவளை, அளுத்கம போன்ற பகுதிகளில் கலவரம் நடந்தவேளை செயல்பட்ட சில சிங்கள புலனாய்வு துறை அதிகாரிகளின் பெயர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரவுள்ளது எனபதே, பிரிகேடியர் ருவாண் வணிகசூரியவின் பதட்டத்திற்கு காரணம் ஆகும்.
இந்த விடையம் தொடர்பாக நாம் பொறுத்திருந்து தான் பார்கவேண்டும். சில முஸ்லீம்கள் அமெரிக்க அரசுக்கு சில தகவலை வழங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தற்போது நன்றாகத் தெரிகிறது. இது என்ன விடையம் என்பது விரைவில் வெளியாகும்.
http://www.athirvu.com/newsdetail/266.html
Geen opmerkingen:
Een reactie posten