கஞ்சா பதுக்கி வைக்கும் கோட்டையாக மாறிவரும் இளவாலை மற்றும் மாதகல் பகுதிகள் !
[ Jun 25, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4460 ]
யாழ்ப்பாணத்தில் அண்மை நாட்களாக தொடர்ந்தும் கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டு வருகிறது. கைப்பற்றப்படும் கஞ்சாவும் சாதாரண அளவிலான கஞ்சா அல்ல. கிலோக்கணக்கிலான கஞ்சாதான் கைப்பற்ப்பட்டு வருகின்றது.இரண்டு வாரங்களின் முன்னர், இளவாலைப் பொலிசார், பெருமளவிலான கஞ்சாப்பொதிகளை கைப்பற்றியிருந்தனர். அவை இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டவை. இதேபோன்று, நேற்றும் பெருமளவான கஞ்சா மீட்கப்பட்டுள்ளன என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இவை கேரளாவில் இருந்து கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, கடற்கரை பற்றகைக்காடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில், கடற்படையினர் இவற்றை கண்டெடுத்து, காவல்த்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.வடக்கில் கஞ்சாப்பாவனை என்றுமில்லாத அளவில் அதிகரித்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இளவாலை, மாதகல் கடற்பரப்பகளிற்கூடாகத்தான் கஞ்சா தற்போது எடுத்து வரப்பட்டுக் கொண்டிருக்கின்றதென்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/253.htmlபிரித்தானியாவில் ஈழத் தமிழர்களுக்கு 2 வது இடம்: பாராட்டியுள்ள ஊடகங்கள் !
[ Jun 25, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 23620 ]
இது என்ன பெரிய விடையம் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆம் இது ஆங்கிலேயர்களை பொறுத்தவரை நிச்சயம் பெரிய விடையம் தான். ஏன் என்றால் ஆங்கிலேயர்கள் பாய் -பிரன் மற்றும் கேள் பிரன்ஸாக மட்டுமே வாழ்ந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவர்கள் திருமணம் முடிப்பதே இல்லை. திருமணம் முடிப்பது என்பது , ஒரு கைதியைப் போல வாழ நேரிடும் என்றும் அது ஒரு சிறைச்சாலைக்கு செல்வது போன்றது என்பதுமே அவர்கள் கருத்தாக உள்ளது. அத்தோடு திருமணம் முடிக்காமல் இருந்தால், பிரித்தானியாவில் தம்பதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தமக்கான சோஷல் காசுகளை பெற்றுகொள்ளலாம். ஆனால் திருமணம் முடித்தால் கணவன் மனைவிக்கு என்று தனி தனியாக காசு கொடுக்க மாட்டார்கள். அதாவது பெனிவிட் காசை நினைத்தே ஆங்கிலேயர்கள் இவ்வாறு திருமணம் முடிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
எது எவ்வாறாயினும், ஈழத் தமிழர்கள் 84 சதவீதம் இப்படி இருக்கிறார்கள் என்பது பெரிய விடையம் அல்லவா ? தமது சொந்த நாட்டை விட்டு அவர்கள் பிரிந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வாழ்ந்து வந்தாலும், தமது பழக்க வழக்கங்களை அவர்கள் இன்னும் மாற்றவும் இல்லை. அவர்கள் சந்ததிகளும் அதனையே பின் தொடர்கிறார்கள் என்பது பெருமையான விடையம்.
http://www.athirvu.com/newsdetail/255.html
ஒவ்வொரு நாளும் கடற்கரையிலும் காடுகளிலும் தமிழர்களின் சடலங்கள் ஒதுங்குகின்றன !
[ Jun 25, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 9625 ]
யாழ்.தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். தும்பளையினைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை வேளையில் தொழிலுக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதாக தகவல் தெரிவித்தமையினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் கூறினார்கள்.
http://www.athirvu.com/newsdetail/256.html
Geen opmerkingen:
Een reactie posten