இலங்கையில் அரச அதிகாரிகளே பெரும்பாலும் ஆட்கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்றும், மேலும் இலங்கைப் பெண்கள் பாலியல் அடிமைகளாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள் என்றும் அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உளவு நிறுவனமான (CIA) சி.ஐ.ஏ ஆண்டுதோறும் சில நாடுகள் தொடர்பாக தமது அறிக்கையை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதில் 2013ம் ஆண்டுக்கான அறிக்கையை அது தற்போது அப்டேட் செய்துள்ளது. அதில் பல புதிய விடையங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இலங்கையில் அரச அதிகாரிகளுடன் மற்றும் அமைச்சர்களுடன் தொடர்புடைய நபர்களே ஆட்கடத்தல் மற்றும் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பல பெண்கள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சிங்கபூர் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவதாகவும், இவ்வாறு அனுப்பிவைக்கும் பல பெண்கள் அங்கே பாலியல் அடிமைகளாக இருப்பதாகவும் சி.ஐ.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த இந்த வேலைவாய்ப்பு திட்டத்தில் இலங்கை ஆரசு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக மேலும் அறியப்படுகிறது. சவுதி அரேபியா, கட்டார், ஜெமன், குவைத், புரூனே, ஈரான், போன்ற நாடுகளில் உள்ள பெரும் செல்வந்தர்கள்(எண்ணெய் கிணறு முதலாளிகள்) இலங்கையில் இருந்தே பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இவர்களில் பலர், தமது முதலாளிக்கு பாலியல் அடிமைகளாவே உள்ளார்கள்.
இதேவேளை இலங்கையில் சுமார் 5 லட்சம் மக்கள் நிலந்தரமாக, இடம்பெயர்ந்துள்ளார்கள் என்றும் இவர்களில் பலர் தமிழர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா , நியூசிலாந்து மற்றும் பிற நாடுகளுக்கு அட்களை படகுகள் மூலம் கடத்தும் நபர்கள் அரச அதிகாரிகளின் நெருங்கிய சகாக்களாக உள்ளார்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் ரிவீட்டரில் இணைந்துள்ளது. இதனூடாக அது பல செய்திகளை தற்போது வெளியிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தகக் விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/261.html
Geen opmerkingen:
Een reactie posten