தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

ஐ.நா விசாரணைக் குழுவின் ஆலோசகர் புலிகளின் ஆதரவாளர்!- சிங்கள ஊடகம்!



வட்டரக்க விஜித தேரர் உளவியல் மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார்- தன்னைத் தானே தாக்கியதாக ஒப்புக் கொண்டார் தேரர்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:08.59 AM GMT ]
ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் உளவியல் மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வட்டரக்க விஜித தேரர், உளவியல் மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வட்டரக்க விஜித தேரரை எவரும் தாக்கவில்லை என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
காயங்களுக்கு உள்ளாகி சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வட்டரக்க விஜித தேரருக்கு ஏதேனும் உளவியல் பாதிப்புக்கள் உண்டா என்பதனை கண்டறிவதற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
வட்டரக்க விஜித தேரர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதன் பின்னர் அவருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தன்னைத் தானே தாக்கியதாக ஒப்புக் கொண்டார் வட்டரக்க தேரர்
ஜாதிக பல சேனாவின் ஏற்பாட்டாளரான வட்டரக்க விஜித தேரர் தன்னைத் தானே தாக்கி்க கொண்டதாக ஒப்புக் கொண்டார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்ட இரு பொலிஸ் மெய்ப் பாதுகாவலர்கள் அண்மையில் திடீரென விலக்கப்பட்ட நிலையில் அவர்களை மீளத் திரும்பப் பெறும் உள்நோக்கத்துடனேயே வண. வட்டரக்க விஜித தேரர் தமக்குத் தானே உடல் தீங்கு செய்துகொண்டார் என தெரிவிக்கப்படடுள்ளது.
இதனை அவரே தங்களிடம் நேரில் தெரிவித்தார் என “மௌபிம” சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
வண. வட்டரக்க விஜித தேரர் கடந்த வாரத்தில் திடீரெனக் கடத்தப்பட்டு, பலவந்தமாக சுன்னத்துச் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் என செய்திகள் வெளிவந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு சிகிச்சையின் இடையே குறித்த பத்திரிகையாளருடன் அவர் உரையாடியிருக்கின்றார்.  முகத்தைத் தமது துவாய்த் துண்டினால் மூடியபடி அவர் உரையாடினார் என்று கூறப்பட்டது.
அண்மைய தினங்களில் அவரது உடலில் ஏற்படுத்தப்பட்ட தீங்குகளுக்கான சிகிச்சை முடிவடைந்து விட்டது எனினும், அவர் தமது பழைய நோய் உபாதைகள் குறித்து முறையிடுவதால் அவற்றுக்கான சிகிச்சைக்காக அவர் ஆஸ்பத்திரியில் வைத்துக் கண்காணிக்கப்படுகின்றார் என்றும் பெரும்பாலும் இன்று மருத்துவ சிகிச்சையிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஆஸ்பத்திரியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், தம்மை யாரோ கடத்திச் சென்று, தாக்கி, உடற்தீங்கு விளைவித்தனர் என்ற அவரது முறைப்பாடு வெறும் நாடகம் என்று கண்டுபிடிக்கப்படுமானால் அதற்காக கடும் சட்ட நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்ள வேண்டி நேரும் என்றும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaesz.html
ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார் இலங்கையின் புதிய தூதுவர்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:51.09 AM GMT ]
அமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்கா, வோஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.
இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
இவருக்கு முன்னர் இலங்கைத் தூதுவராக ஜாலிய ஜயசூரிய கடமையாற்றியிருந்தார்.
இவருக்கு பதிலாகவே தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் ததுவராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaes1.html
ஐ.நா விசாரணைக் குழுவின் ஆலோசகர் புலிகளின் ஆதரவாளர்!- சிங்கள ஊடகம்
[ புதன்கிழமை, 25 யூன் 2014, 02:25.12 AM GMT ]
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவில் ஆலோசகர்களில் ஒருவராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மராட்டி அத்திசாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொசோவோவை தனி நாடாக பிரகடனம் செய்வதற்கான எற்பாடுகளை அத்திசாரியே மேற்கொண்டிருந்தார்.
வன்னிப் போர் இடம்பெற்ற காலத்தில் அத்திசாரி இலங்கைக்கு விஜயம் செய்து போரை நிறுத்த முயற்சித்தார்.
இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவின் ஆலோசகர்களாக நியூசிலாந்தின் சில்வியா கட்ரைட் மற்றும் பின்லாந்தின் அத்திசாரி ஆகியோர் கடமையாற்ற உள்ளதாக சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRZLaes0.html

Geen opmerkingen:

Een reactie posten