வாகரையில் "பயனுள்ள சேவையை வழங்குவதன் மூலம் உலகிற்கு சுபீட்சம் எனும் தொனிப் பொருளில் உள்ளூராட்சி வாரம்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 06:19.51 AM GMT ]
அதற்கிணங்க வாகரை பிரதேச சபையின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் வாகரை மகா வித்தியாலயம், மற்றும் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வீதி நாடகங்களை வெள்ளிக்கிழமை நடாத்தியது.
வாகரை மகா வித்தியாலயத்தில் வாகரை பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, வாகரை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் வே.நவீதரன், வாகரை மகா வித்தியாலய அதிபர் எஸ்.அரசரெட்ணம், வாகரை பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராம பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அத்தோடு கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் நா.சந்திரலிங்கம் தலைமையில் வித்தியாலய முன்பாக வீதியோர நாடகம் நடைபெற்றது. இவ் நாடகத்தினை பிரதேச சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.ஜோசப் ஜோய் என்பவரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றிருந்தது.
அத்தோடு வாகரைப் பிரதேசத்தில் முதலாவதாக நெய்தல் சஞ்சிகை வெளியீடும், கலைஞர்கள் கௌரவிப்பும், நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி வாரத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 24ம் திகதி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக வாகரை பிரதேச சபை செயலாளர் சி.இந்திரகுமார் தெரிவித்தார் யூன் மாதம் 16ம் திகதி முதல் யூன் மாதம் 22ம் திகதியுடன் உள்ளுராட்சி வாரம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagr1.html
உதைப்பந்தாட்ட போட்டி நிர்ணயம் தொடர்பில் இலங்கை வர்த்தகர் உட்பட மூவருக்கு சிறைத்தண்டனை
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 06:50.03 AM GMT ]
மைக்கல் போடேங் சான் சங்கரன் கிருஸ்ணா கணேசன் ஆகியோர் பிரித்தானிய பேர்மிங்கம் க்ரௌன் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக இனங் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் தலா ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் சங்கரன் என்பவர் சிங்கப்பூரை சேர்ந்தவர் கணேசன் என்பவர் இலங்கையை சேர்ந்தவர் என்று த காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் முன்னாள் உதைப்பந்தாட்ட வீரரான போட்டேங்குக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
பெரும்பாலும் சங்கரன் சிங்கபூருக்கு நாடு கடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ள நீதிபதி அது பிரித்தானிய உள்துறை அமைச்சை பொறுத்தவிடயம் என்று குறிப்பிட்டுள்ளாh
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagr5.html
அசாத் சாலிக்கு நீதிமன்ற தடையுத்தரவு! பொதுபல சேனாவுக்கு அரச ஆதரவு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 07:42.48 AM GMT ]
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி, பொதுபல சேனா போன்ற சிங்கள இனவாத அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.
மறுபுறத்தில் தமிழ்,முஸ்லிம் ஒற்றுமைக்கு தன்னாலான முயற்சிகளையும் எடுத்து வருகின்றார். மேலும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிறுபான்மை விரோதப் போக்குகளையும் துணிச்சலுடன் எதிர்த்து வருகின்றார்.
இந்நிலையில் அசாத் சாலியின் நடவடிக்கைகள் இனவாத கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதாக கூறி, அவருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் அவர் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவோ, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே அளுத்கமை வன்முறைகளுக்கு ஞானசார தேரரின் இனவாத உரைதான் அடிப்படையாக அமைந்திருந்ததாக ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டியதற்கு, அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக பொலிஸ் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
ஞானசார தேரர் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று கூறினாரே தவிர, அவர் தாக்குதலில் பங்கெடுக்கவில்லை என்றும், அதன் காரணமாக அவருக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagsz.html
Geen opmerkingen:
Een reactie posten