ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் உரையாற்றிய கனடாவின் பிரநிதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
வடக்கில் அதிகரித்துக் காணப்படுகின்ற படைத்தரப்பின் பிரசன்னத்தால், வடக்கு பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதாக கனடா தெரிவித்துள்ளது. அத்துடன் படைத் தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்ற பெண்களுக்கு எதிராக, பாலியல் துஸ்பிரயோகத்தை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு இன்று பதில் வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் பிரநிதி ரவிநாத் ஆரியசிங்க, இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படுமாக இருந்தால், அதற்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten