[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 07:02.31 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெரும மீது பேருவளையில் கடந்த 17 ஆம் திகதி இரவு பிரதேசத்தில் கலவரத்தை ஏற்படுத்திய பொதுபல சேனா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவர் தனது பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் விபரித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் கர்ப்பிணி தாய் ஒருவர் மற்றும் குழந்தைகளை காப்பற்றி அவரது வானில் ஏற்றி முயற்சித்த போது கலவரகார்கள் தாக்குதல் நடத்தியதுடன் வானையும் சேதப்படுத்தியிருந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம் சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
பொலிஸாரும் அதிரடிப்படையிரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தான் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தெவரப்பெரும மேலும் தெரிவிக்கையில்,
தர்கா நகரில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து தேடிப்பார்பதற்காக 17 ஆம் திகதி இரவு நான் அங்கு சென்றிருந்தேன்.
அப்போது பயங்கரவாதிகள் குழுவொன்று வாள்கள்,பொல்லுகள் சகிதம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுவர்களை சுற்றிவளைத்து கொண்டு அவர்களை கொலை செய்ய முயற்சித்து கொண்டிருந்தனர்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட நான் வானில் இருந்து இறங்கி பெண்களையும் சிறுவர்களையும் காப்பற்றி வானில் ஏற்றினேன். இதன் பின்னர் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
வயதான அம்மா ஒருவரும், கர்ப்பிணி தாய் ஒருவரும் பிள்ளைகளுடன் காணப்பட்டனர். அந்த பிள்ளைகளுக்கு 6,7, 13 வயது இருக்கும்.
இவர்களை நான் எனது டொல்பின் வானில் ஏற்றிச் செல்லும் போது பயங்கரவாதிகள் கல், இரும்பு கம்பிகள், மணல் நிரப்பிய போத்தல்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் கைக்குழந்தையின் தலையின் மீது போத்தல் பட்டு காயம் ஏற்பட்டது. வயதான அம்மா மீதும் போத்தலை வீசி தாக்கினர்.
கைக்குழந்தையின் உயிரை காப்பற்ற முடியாது போகும் நிலைமை காணப்படுகிறது. காயமடைந்த அம்மா நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்.
இது அதிசயமான நிலைமை பயங்கரவாதிகள் பொலிஸாருடன் இருந்தனர். அவர்களுக்கு சற்று தொலைவில் அதிரடிப்படையினரின் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.
பொலிஸாரும், அதிரடிப்படையிரும் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் . அவர்கள் தாக்குதல் நடத்தினர். கொலை செய்தனர்.
நான் எனது வானை பொலிஸ் வானில் மோதி விட்டு தப்பி வந்தேன். புதிய வான் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் என் கண்ணுக்குள் கண்ணாடி துகள்கள் சென்றுள்ளன எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaho5.html
இந்திய பெண் ஒருவர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு எதிராக வழக்கு தாக்கல்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 07:14.09 AM GMT ]
இந்த வழக்கு நாளை 20 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் இந்தப்பெண் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தமது சிரேஸ்ட பணியாளர் ஒருவர் மீதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டில் அவர் அதிகாரிகளிடம் முறைப்பாட்டை செய்தபோதும் இதுவரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனினும் தமது சிரேஸ்ட பணியாளுக்கு எதிராக முறைப்பாட்டை செய்த பின்னர் குறித்த பெண் கொச்சியில் இருந்து புதுடில்லிக்கு மாற்றப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaho6.html
ஹர்த்தாலில் போது அசம்பாவிதம்! ஒருவர் கைது-அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டார்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 07:34.52 AM GMT ]
அத்தோடு வானகங்களுக்கு கல் வீசப்பட்டது தொடர்பில் ஆறு வாகன உரிமையாளர்கள் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டார்
அளுத்கமை, தர்காநகர், பேருவளை மற்றும் வெலிப்பன்னையில் இனவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து இன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அன்ஸில் விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டார்.
இத்தாக்குதல் தொடர்பில் தவிசாளர் அன்ஸில் ஊடகங்குளுக்கு கருத்துத் தெரிக்கையில்,
அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கொடூர இனவெறித் தாக்குதலின் பின்னணியில் இலங்கை இராணுவத்தினர் இருந்திருக்கக்கூடும் என்ற மக்களின் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலேயே இன்று விஷேட அதிரடிப் படையினர் மக்கள் மீதும் என்மீதும் தாக்கியதிலிருந்து மிக தெட்டத்தெளிவாக புலனாகின்றது.
இவர்களின் இத்தாக்குதல்களுக்குப் பயந்து நான் ஓடப்போவதில்லை. எமது மக்களுக்காகவும் சமூகத்துக்காகவும் எனது உயிரையும் உடமைகளையும் நான் இழக்கத் தயாராக இருக்கின்றேன். என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLaho7.html
ஜனநாயக விரோதிகளுக்கு சுதந்திரம் வழங்கக் கூடாது!- வாசுதேவ நாணயக்கார
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 07:40.14 AM GMT ]
அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சிங்கள மற்றும் முஸ்லிம் சமாதான பிரதிநிதிகளுடன் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்தை மதிப்பவர்களுக்கு மாத்திரமே ஜனநாயகம் சுதந்திரத்தை வழங்க வேண்டும். ஜனநாயக விரோதிகளுக்கு இந்த சுதந்திரத்தை வழங்கக் கூடாது.
அப்படியானவர்களுக்கு அந்த சுதந்திரத்தை வழங்குவது பாரிய ஜனநாயக தவறாகும்.
மக்களை தூண்டும், பகை உணர்வுகளை தூண்டி, மக்களை சீண்டி விடும் வகையிலான கூட்டத்திற்கு அனுமதி வழங்கியதே அளுத்கம பிரதேசதத்தில் பாரிய வன்முறை ரீதியான அனர்த்தங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.
ஜனநாயக விரோதிகளுக்கு ஜனநாயக சுதந்திரத்தை வழங்க முடியாது. இனவாதம், அந்திய இனத்தை அழிக்குத் நோக்கம், இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்துவது போன்ற தேவை வெளிநாடுகளின் தேவைகளுக்கு அமைய செயற்படும் கைப்பாவைகளுக்கே இருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahpz.html
Geen opmerkingen:
Een reactie posten