தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

ராஜபக்ஸ அரச விசுவாசத்தில் டீ.எம்.ஜயரட்னவை விஞ்சிய டக்ளஸ தேவானந்தா !

பாட்டும் நானே ! பாவமும் நானே ! பாடும் உனை நான் பாடவைத்தேனே !

[ Jun 19, 2014 05:44:19 AM | வாசித்தோர் : 7150 ]
பொலீவியா சென்று, அன் நாட்டில் சமாத விருதை வாங்கிவிட்டு பின்னர் கொழும்பு திரும்பிய மகிந்தர், நேராக பேருவளை சென்று பஞ்சாயத்து செய்துள்ளார். பாட்டும் நானே பவமும் நானே என்பது போல, அடிக்கச் சொன்னது நானே அணைக்க வருபவனும் நானே என்கிறார். புத்த பிக்குகளை ஒரு புறமாக இருத்தி மறு பக்கத்தில் முஸ்லீகளை இருத்தி நடுவில் மேசை போட்டு பஞ்சாயத்து செய்துள்ளார் மகிந்தர். ஆனால் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. வழமையாக தேரர்கள் தமது பாணியில் தெணாவட்டாக உட்காந்து இருந்தார்கள். காலை தொட்டு கும்பிடுவதுபோல மகிந்தர் குனிந்து கும்பிடு போட்டுவிட்டு பஞ்சாயத்தை ஆரம்பித்து முடித்தார் அவ்வளவு தான். இதோ படங்கள் இணைப்பு.
http://www.athirvu.com/newsdetail/180.html

ராஜபக்ஸ அரச விசுவாசத்தில் டீ.எம்.ஜயரட்னவை விஞ்சிய டக்ளஸ தேவானந்தா !

[ Jun 19, 2014 06:08:33 AM | வாசித்தோர் : 5885 ]
பாராளுமன்றில் பேச சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கோபித்து வெளியேறிய பிரதமர் ? பாராளுமன்றில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கோபித்துக்கொண்டு அவையை விட்டு பிரதமர் டி.எம் ஜயரட்ன வெளியேறிச் சென்றதாக கொழும்பு ஊகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்றைய தினமும் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது.
இந்த விவாதத்தில் பிரதமருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும், அதனால் ஆத்திரமுற்ற பிரதமர் அவையை விட்டு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரதமருக்கு முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது. தமக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையே அமைச்சர் டக்ளஸிற்கு வழங்கப்பட்டதாக பிரதமர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக பிரதமர் அமைச்சரவைக் கூட்டங்களை புறக்கணித்து வருவதாகவும் அண்மையில் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ராஜபக்ஷர்களுக்கும் பிரதமர் டீ.எம்.ஜயரட்னவுக்கும் இடையே பாரிய முரன்பாடுகள் முற்றியுள்ளதாகவும் , மேலும் அறியப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/181.html

Geen opmerkingen:

Een reactie posten