தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 juni 2014

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்

அமெரிக்க ஜனாதிபதிகளை பிடித்து மரத்தில் கட்ட வேண்டும்!- எஸ்.பி.திஸாநாயக்க
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 09:08.44 AM GMT ]
ஈராக் போரில் போர் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அமெரிக்க ஜனாதிபதிகளை பிடித்து மரத்தில் கட்ட வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மடவலை மதீனா பாடசாலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போர் குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களை சதாம் ஹூசைனின் நாட்டுக்கு அனுப்பினர்.
கடாபியிடம் குறைபாடுகள் இருந்திருக்கலாம். அதனை விட அமெரிக்கத் தலைவர்களிடம் குறைபாடுகள் காணப்படுகின்றன.
அமெரிக்க தலைவர்கள் அடித்து உதைத்து தொங்கவிட்டு, மரத்தில் கட்டி வைக்க வேண்டும்.
ஜோர்ஜ் புஷ், ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் போன்ற செய்த குற்றங்களுக்காக அவர்களை தாக்கி, தொங்கவிட்டு, கொன்று தரையில் இழுத்து செல்ல வேண்டும்.
அப்படி செய்தால் அவர்களுக்கு எதிராக விரும்பிய விசாரணைகளை செய்ய முடியும். இந்த துரதிஷ்டசாலிகள் எவரையும் இலங்கை மண்ணில் காலடி வைக்க இடமளிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை நாம் நாடாளுமன்றத்தில் எடுத்துள்ளோம் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafu0.html
வைபவங்களை நடத்தியதன் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகம் உலக சாதனை படைத்துள்ளது: கயந்த கருணாதிலக்க
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 09:17.53 AM GMT ]
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில், அரசாங்கம்  வைபவங்களை நடத்தி உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
துறைமுகத்தின் அடிவாரத்தை காண்பிக்கவும் துறைமுகத்திற்கு கடல் நீரை திறந்து விடவும் அரசாங்கம் வைபவங்களை நடத்தியது.
இதன் பின்னர், முதல் கப்பல் துறைமுகத்திற்கு வந்த போது வைபவம் ஒன்றை நடத்தியது.
இந்த நிலையில், துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு எரிபொருளை நிரப்பும் தாங்கிகளை திறந்து வைப்பதற்கு வைபவத்தை நடத்தியுள்ளது.
அரசாங்கம் நடத்தும் இப்படியான வைபவங்களுக்கு மக்களின் பணமே செலவிடப்படுகிறது எனவும் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafu1.html
அரசாங்கத்திற்கு முடிவில்லை! இன்னும் நீண்டகாலம் உள்ளது!- நிமால் சிறிபால டி சில்வா
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 09:45.14 AM GMT ]
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முடிவு காலம் இதுவல்ல எனவும் இந்த அரசாங்கம் நீண்டகாலத்திற்கு இருக்கும் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை  பகுதியில் மின் விநியோக திட்டத்தை மக்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் அரசியல்வாதிகளான எம்மை வலுப்படுத்த வேண்டும். அரசாங்கம் வலுவான நிலையில் இருக்கும் போதுதான் அபிவிருத்திகளும் வலுவாகும்.
அரசியல் இல்லாமல் அபிவிருத்தியை செய்ய முடியாது. இது அரசாங்கத்தின் முடிவு காலம் அல்ல. அரசாங்கம் மேலும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும்.
இதனால், எமது அரசாங்கத்தின் கீழ்தான் வீதியை நிர்மாணிக்க முடியும். நாம் மக்களிடம் வாக்குகளை மட்டுமே கோருகிறோம். வேறு எதனையும் கேட்பதில்லை. இதனால், சிரமப்பட்டாவது வாக்களிக்க செல்லுங்கள் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafu3.html
முல்லைத்தீவில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரனை
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 09:52.20 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 5ஆம் மாதம் முதல் 8ஆம் திகதி வரை இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.  ஜூலை மாதம் 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இவ்விடயம் குறித்து இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafu4.html
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 10:40.42 AM GMT ]
அகதி அந்­தஸ்து நிரூ­பிக்­கப்­பட்ட புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் நிரந்த விசாக்­களின் எண்­ணிக்­கையை மட்­டுப்­ப­டுத்­து­வது தவ­றா­ன­தென உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­ததைத் தொடர்ந்து, இதற்­கு­ரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக ஏ.பி.சி. செய்தி ஸ்தாபனம் அறி­வித்­துள்­ளது.
தற்­கா­லிக பாது­காப்பு விசா வழங்கும் நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த அர­சாங்கம் மேற்­கொண்ட முயற்­சிகள் செனட் சபையில் முடக்­கப்­பட்­டன.
இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய குடி­வ­ரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் வரு­ட­மொன்றில் 2,773 விசாக்­களை மாத்­திரம் வழங்­கு­வதெனத் தீர்­மா­னித்­தி­ருந்தார்.
இந்தத் தீர்­மானம் செல்­லு­ப­டி­யற்­ற­தென உயர் நீதி­மன்றம் கடந்த வாரம் தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது.
நீதி­மன்­றத்தின் தீர்ப்பு எதிர்­பார்க்­கப்­பட்­டது தான் என அமைச்சர் மொரிசன் தெரி­வித்தார். இந்தப் பிரச்­சி­னையை சமா­ளிப்­ப­தற்­கான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் கூறினார்.
இதன் பிர­காரம், முன்னாள் பிர­தமர் ஜோன் ஹொவார்ட்டின் ஆட்­சி­கா­லத்தில் அமுலில் இருந்த தற்­கா­லிக பாது­காப்பு விசா நடை­மு­றையை மீண்டும் அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அவர் கூறினார்.
தற்­கா­லிக பாது­காப்பு விசாவைப் பெறும் ஒருவர், தமது அகதி அந்­தஸ்து மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் வரையில் அவுஸ்­தி­ரே­லி­யாவில் மூன்று வரு­டங்கள் தங்­கி­யி­ருக்­கலாம்.
எவ்­வா­றா­யினும், இந்த தற்­கா­லிக பாது­காப்பு விசா நடை­மு­றை­யா­னது அக­தி­க­ளுக்கு உள­வியல் ரீதி­யான தாக்­கங்­களை மேலும் அதி­க­ரிக்கும் என பசு­மைக்­கட்சி மற்றும் அக­தி­க­ளுக்­கான குழுக்கள் தெரி­வித்­துள்­ளன.
அதே­வேளை, அவுஸ்­தி­ரே­லி­யாவின் கொள்கை­களில் மாற்­ற­மில்­லை­யென தெரி­வித்­துள்ள அந்­நாட்டு அர­சாங்கம், பட­கு­களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் வருபவர்களுக்கு நிரந்தர வதிவிட விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRXLafvy.html

Geen opmerkingen:

Een reactie posten