[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 12:20.43 AM GMT ]
அளுத்கம, பேருவளை பிரதேசத்தில் தற்போது இயல்பு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஹர்த்தல் மற்றும் போராட்டங்களை நடத்தினால் மீளவும் வன்முறைகள் வெடிக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு வன்முறைகள் வெடித்தால் அதற்கான பொறுப்பினை ஹர்த்தால் நடாத்தும் முஸ்லிம் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஹர்த்தால் மற்றும் போராட்டங்களின் மூலம் சிங்கள பௌத்த கடைகள் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஒமல்பே சோபித தேரர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULaht3.html
முதுகெலும்பில்லாத முஸ்லிம் அமைச்சர்கள்: சண் குகவரதன்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 03:14.25 AM GMT ]
முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது கவலையையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அளுத்கம, பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தம் முடிந்து 5 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால், நாட்டுக்குள் இனங்களிடையே, மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.
மதங்களிடையே குரோதத்தை விதைப்பதற்கு அரசு ஊக்கமளிப்பதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது.
பெளத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபலசேனா ஆரம்பம் தொடக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கை கடைப்பிடித்தது. ஆனால், அரசு இதனைத் தடுக்க எதுவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அதுபோன்று அரசுக்குள் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் உணர்ச்சிபூர்வமான வசனங்களுடன் அறிக்கைகளை வெளியிட்டார்களே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதன் பிரதிபலனையே இன்று அளுத்கமவில் அப்பாவி முஸ்லிம் மக்கள் அனுபவிக்கின்றனர். மூன்று உயிர்கள் அநியாயமாகப் பலியாகியுள்ளன.
அந்த மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த சொத்துகள், வாகனங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. 80இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இன்னமும் அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். உண்மையிலேயே அமைச்சர் ஹக்கீம் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு அரசை விட்டு வெளியேறி இருக்கவேண்டும்.
ஆனால், அந்தளவுக்கு இவர்களுக்கு முதுகெலும்பில்லை. முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து வெட்கம் கெட்ட அரசியல் நடத்துகின்றனர்.
முஸ்லிம் மக்கள் இந்தப் பச்சோந்திகளை அடையாளம் கண்டு அரசியலிலிருந்து ஓரம் கட்டவேண்டும்.
அன்பையும், அஹிம்சையையும் போதித்த புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு பெளத்த குருமார் வன்முறைகளைத் தூண்டுவது எவ்விதத்தில் நியாயமாகும்.
இனியும் முஸ்லிம் மக்களைக் கொடுமைப்படுத்தாது அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahuy.html
7 இந்திய மீனவர்கள் திருமலையில் கைது- மீனவர் பிரச்சனையை தீர்க்க ஐ நாவின் உதவி- தீர்மானம் நிறைவேற்றம்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 03:40.49 AM GMT ]
திருகோணமலை கடற்படை முகாம் உத்தியோகத்தர்கள் குறித்த இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர்.
மீனவர்களின் படகைகுகளையம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மீனவர்களை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், இன்று இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீனவர் பிரச்சனையை தீர்க்க ஐ நாவின் உதவி- தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடி நடவடிக்கை எடுக்கக் வேண்டும் எனக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க கூட்டத்தில்தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது
விசைப்படகு மீனவர்கள் சங்கக் கூட்டம் சேசுஇருதயம் தலைமையில் நேற்று ராமேஸ்வரத்தில் இடம்பெற்றது.
ஜூன் 18ம் திகதி மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் 46 பேர், கைப்பற்றப்பட்ட 11 படகுகள் மற்றும் ஏற்கனவே இலங்கையில் உள்ள 24 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கல்வீசி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். படகை மூழ்கடித்து, வலைகளை சேதப்படுத்திய செயலை கண்டித்தும், மூழ்கடிக்கப்பட்ட படகின் உரிமையாளருக்கு, இலங்கை அரசிடம் இருந்து நிவாரணம் பெற்று தர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர் தாக்குதலால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணவும் பாக்கு நீரிணை கடலில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் தவறும் பட்சத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நாடுகள் மற்றும் ஐ.நா. சபை, தமிழக மீனவர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahuz.html
Geen opmerkingen:
Een reactie posten