தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

தமிழ் முஸ்லீம் மக்கள் மீதான சிங்களபௌத்த இனவெறி தாக்குதலுக்கு கண்டனம்!- வ. கௌதமன்

கடும்போக்காளர்களை தடை செய்ய வேண்டும்: ஜனாதிபதியிடம் முஸ்லிம் சபை கோரிக்கை
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 05:09.49 PM GMT ]
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் கடும்போக்காளர்களை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம்,  இந்தக்கோரிக்கையை முஸ்லிம் சபை விடுத்துள்ளது.
கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ள இந்தக்கோரிக்கையில், அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால் முஸ்லிம்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அளுத்கமை சம்பவத்தின் பின்னர் அது தொடர்பில் எவரும் பேரணிகளை நடத்தி பிரச்சினையை பெரிதாக்கக்கூடாது என்று முஸ்லிம் சபை கேட்டுள்ளது.
பொதுபல சேனா, சிஹல ராவய மற்றும் ராவணா பலய ஆகிய அமைப்புக்களின் செயற்பாடுகளினால் அளுத்கமை மற்றும் பேருவளையில் பாரிய வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
எனவே முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப, கடும்போக்காளர்களை ஜனாதிபதி தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் சபை கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGSdLahs7.html

தமிழ் முஸ்லீம் மக்கள் மீதான சிங்களபௌத்த இனவெறி தாக்குதலுக்கு கண்டனம்!- வ. கௌதமன்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 12:38.33 AM GMT ]
ெதடைகளை தாண்டி எதிர்காலத்தை நோக்கி தமிழீவிடுதலையில் தமிழகம் தமிழக உணர்வாளர்களின் போராட்டங்களின் ஏக்கம் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையை மாற்றி நீதியான தீர்பை தமிழர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலையில் தமிழகம் எனும் தலைப்பில் இனமான இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கௌதமன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இன்றைய இந்த சந்திப்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சார்பில் புலம்பெயர்ந்த தமிழ் பிரதிநிதிகள் இணையவழியில் தமிழக முதல்வரிடம் முக்கியமான அவசர வேண்டுகேளை பதிவு செய்துள்ளதுடன் இந்திய பிரதமர் தமிழக முதல்வரின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி தருமாறும் வலியுறுத்தியுள்ளார்கள்.
தமிழின உணர்வாளரான வ.கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்த வேண்டியும் வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்தியா பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றால் ஈழம் மலர வேண்டும், இன்று சிங்கள அரசு ஐ.நா விசாரணை குழுவினை நாட்டிற்குள் நுளைய விடாதவாறு தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.
தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் தமிழகத்தினதும், இந்தியாவினதும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டுதான் திருகோணமலையினை அமெரிக்காவிற்கு கொடுக்க மறுத்தார். ஆனால் இன்று அங்கு சீனா,பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் காலூன்ற தொடங்கிவிட்டன. இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது.
அதுமட்டுமல்ல இன்று தமிழர் வாழ் இடங்களில் முழுமூச்சுடன் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள். ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் தமிழர்கள் படை முற்றுகைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார் அவர்.
இன்று சிங்கள தேசத்தில் தமிழர்கைள அழிப்பதோடு மட்டும் நின்று விடாமல் இன்னும் இரத்தவெறி தீராமல் தமிழ், முஸ்லீம் உறவுகளை சிதைக்க தொடங்கியுள்ளார்கள். அதற்கு நாங்கள் தமிழகத்தில் இருந்து கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சோ்ந்தவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்து ஸ்கைப் ஊடாக தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
இன்றைய சந்திப்பில் மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத்தினை சோ்ந்த பிரதீப்குமார், தமிழ் இளையோர் மற்றும் மாணவர் கூட்டமைப்பினை சோ்ந்த பிரபாகரன்,  லொயோலா கல்லூரி மாணவன் செம்பியன்,  சட்டக்கல்லூரி மாணவர் ஜோதிலிங்கம் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.
கனடா அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் இணைத்தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.  டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக சுகுநேந்திரன் மார்க்கண்டு தமிழகத்தில் மாணவர்களின் எழுச்சி போராட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக முதல்வரின் தீர்மானங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சிங்கள மனித உரிமையாளர் வீராஜ் மென்டிஸ் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களும் அதன் பின்னணியில் உள்ள நாடுகளும் அவற்றை எவ்வாறு தமிழர்கள் போராடி உண்மையினை உலகிற்கு சொல்ல வேண்டும் என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான நிர்மானுசன் பாலசுந்தரம், தமிழகத்திலும் இந்தியாவிலும் ஒரு திருப்புமுனையான வரலாற்று முக்கியத்துவமான ஒருகால கலகட்டம் உருவாகியுள்ளது. எதிர்வரும் 5 ஆண்டுகள் என்பது எங்கள் போராட்டத்தின் எதிர்காலம் உங்களுடைய கைகளில் வந்துள்ளதாக நாங்கள் எண்ணுகின்றோம்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி பேதங்களை மறந்து உங்களுடைய தொப்புள்கொடி உறவுகளுக்காக இன்று இனஅழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் இன அழிப்பினை நிறுத்துவதற்கும் இழந்து விட்ட இறையாண்மையினையும் உரிமையினையும் பெற்றுக்கொள்ள தமிழகத்தில் உள்ள உறவுகளும் ஆட்சியில் இருப்பவர்களும் எமக்கான ஆதரவு கருத்தினை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இன்று ஈழத்தில் நடந்து கொண்டிருப்பது இனஅழிப்பு. இந்த இனஅழிப்பினை சிங்கள பௌத்த பேரினவாத அரசு மூன்று வகையாக ஈடுபடுத்தி வருகின்றது. முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நேரடியான இனஅழிப்பினை மேற்கொண்டது. கடந்த ஜந்து ஆண்டுகளில் சிங்கள தேசம் 10ஆயிரம் சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினை சிங்கள அரசு அபகரித்துள்ளது. அங்கு நில ஆக்கிரமிப்பு சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலை தொடருமாக இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் என்ற அடையாளம் இல்லாமல் தமிழினம் வாழ்ந்ததற்கான எந்த சான்றும் இல்லாமல் அழிந்து போகக் கூடிய பேராபத்தை ஏற்படுத்தும். அத்துடன் தமிழின அழிப்பு இனப்பரம்பலை கட்டுப்படுத்தல், திட்டமிட்ட ரீதியில் தமிழர்களின் இனவிருத்தி செயற்பாட்டினை கருத்தடையினை பயன்படுத்தி அழித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் தமிழகத்தின் உண்மையான நடவடிக்கை தமிழகம் மத்தியை நோக்கி நகர்த்துகின்ற நடவடிக்கையில்தான் இருக்கின்றது. ஈழத்தமிழர்களின் போராட்ட நடவடிக்கையினை ஏனைய மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு உண்டு என்றும் தெரிவித்த அவர் இன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு ஆயுதப் போராட்டம் என்பது இல்லை நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை அடக்குமுறையாளர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULaht4.html

Geen opmerkingen:

Een reactie posten