[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 07:15.30 AM GMT ]
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த நாடே பற்றி எரியவில்லை என சிலர் எண்ணுவதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“இது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட இன்னும் பல இனங்களை கொண்ட நாடு என்பதனை நாடாளுமன்ற வரபிரசாதங்களை கொண்டுள்ள சிலர் மறந்து செயற்படுகின்றனர்.
தங்களுடைய வரப்பிரசாதங்களை பயன்படுத்தி சிலர், நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
இனங்களுக்கு இடையிலான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை சிலர் முன்னெடுப்பதற்கும் முயற்சிக்கின்றனர்.
அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கு அடுத்து இந்நாடே தீபற்றி எரியும், இந்த சந்தர்ப்பத்தில் குழப்பிய குட்டையில் நாம் மீன் பிடித்து கொள்ளலாம் என்று சிலர் நினைத்தனர். எமது புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டினால் இந்நாடே தீ பற்றி எரியவிருந்தமை தடுக்கப்பட்டுவிட்டது.
அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்தையடுத்து மேற்குல நாடுகளின் தூதுவராலயத்திலிருந்து, நடந்தது போதாதா என்று வினவப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டை குழப்பி அதில் குளிர்காய்வதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான தேசத் துரோகிகள் தொடர்பில் மக்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaep1.html
வாழைச்சேனையில் நாய் உண்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 07:14.40 AM GMT ]
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி தாமரைக் குளத்தில் இருந்து இன்று காலை சிசு ஒன்றின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.
பொலித்தின் பையில் சுற்றப்பட்ட நிலையில் குளத்திற்கு அருகில் சிசுவின் சடலம் காணப்பட்டுள்ளது.
நாய் உட்கொள்ளும்போது அந்த பொலித்தீன் பையினுள் சிசுவின் சடலம் இருப்பதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
இதன் போது சிசுவின் கால்பகுதியொன்று நாயினால் கடித்து துண்டாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொதுமக்கள், வாழைச்சேனை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சிசுவின் சடலத்தினை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனைப் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyG
வவுனியா நகரசபையின் கூரை மேல் ஏறி பெண்ணொருவர் போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 07:36.48 AM GMT ]
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியாவில் கடந்த காலங்களில் டெங்கு நோய் பரவாமலிருப்பதற்காக நகரசபையினால் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து 07 தொழிலாளர்களுக்கு ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாக நகரசபை செயலாளரினால் அண்மையில் கடிதமொன்று வழங்கப்பட்டு சேவை முடிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் ஒப்பந்தம் முடிவடைந்த 5 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொழிற்சங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பின்னர் போராட்டம் முடிவுறுத்தப்பட்டு அதிகாரிகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக அச்சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் எஸ்.சித்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தொழிற்சங்கம் மற்றும் நகரசபையினருக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காத நிலையில் இரு பெண்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பெண் நகர சபையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் எஸ். சித்திரன் கருத்து வெளியிடுகையில்,
எமது தொழிற்சங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இவ் இரு பெண்களும் எமக்கு எவ்வித அறிவித்தலும் இல்லாது இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது சங்கம் இப் போராட்டத்திகு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaep2.html
ஐ நா விசாரணைக் குழுவில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி?
[ செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2014, 07:48.15 AM GMT ]
ஐ.நா விசாரணைக் குழுவில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு, குழுவின் ஆலோசனை வழங்கும் பிரத்தியேக நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொடர்பான விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழுவை வழிநடத்தவும் ஆலோசனைகளை வழங்கவும் வெளியக வல்லுநர்கள் இருவரை நியமிக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவு செய்திருந்தமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு இரண்டு நிபுணர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. இவர்களில் ஒருவராக நியுசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம் டேம் சில்வியா கட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது வல்லுநராக ஆசியா அல்லது ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க முயன்றதாகவும் எவரும் கிடைக்காத காரணத்தால் பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் சாமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவருமான மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாமென ஊகிக்கப்படுகின்றது.
இவர் ஐக்கிய நாடுகளின் கொசோவாவிற்கான பிரதிநிதியாகவும் பணியாற்றியவராவார்.
இதேவேளை, விசாரணைக் குழுவினரின் உறுப்பினர் தெரிவு மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் இந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கபடுகின்றது.
இதேசமயம், விசாரணை சபை முன் சாட்சியமளிக்க முன்வரும் தமிழ் மக்களிற்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுமென ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களிற்கான உதவி செயலாளர் ஒஸ்கர் பேர்னான்டஸ் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyGRYLaep3.html
Geen opmerkingen:
Een reactie posten