லண்டனில் சீனாவுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள் !
05 June, 2014 by admin
1989ம் ஆண்டு சீனாவில் பெரும் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது அனைவராலும் அறியப்பட்ட விடையம். சீனாவில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் பல மாணவர்கள் கூடி சீன அரசுக்கு எதிராக அமைதியான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்பாட்டத்தை அமெரிக்க அரசே திட்டமிட்டு செய்வதாக சீன அரசு குற்றஞ்சுமத்தியது. அங்கே குழுமி இருந்த பல நூறு மாணவர்களையும் மக்களையும் சீன இராணுவம் கண் மண் தெரியாமல் சுட்டுக்கொன்றது. அதுவும் அப்போது ஒரு முள்ளிவாய்க்கால் தான். அந்த அளவு மக்கள் இறந்துபோனார்கள். சுமார் 2,500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அன் நாளை நினைவு கூர இன்றுவரை சீன அரசாங்கம் தடைவிதித்து வருகின்றது. ஆனால் நேற்றைய தினம்(04) லண்டனில் வசிக்கும் சீனர்கள் அங்குள்ள சீன தூதரகத்திற்கு முன்னதாக பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
1989ல் கொல்லப்பட்ட தமது உறவுகளை அவர்கள் நினைவு கூர்ந்தார்கள். இவர்களோடு ஈழத் தமிழர்களும் இணைந்துகொண்டார்கள் என்பது தான் மிகவும் முக்கியமான விடையங்களுள் ஒன்றாகும். சீன அரசை எதிர்க்கும் சீனர்களோடு, ஈழத் தமிழர்களும் இணைந்து 1989ம் ஆண்டு சீன அரசு செய்த கொடுமையைக் கண்டித்தார்கள். அத்தோடு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலத்தைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இதனூடாக பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் ஈழத் தமிழர்களும், கொல்லப்பட்ட சீனர்களின் உறவினர்களும் லண்டனில் நேற்றைய தினம் இணைந்துகொண்டார்கள். இது மிகவும் ஒரு ராஜதந்திர ரீதியான நகர்வாக கருதப்படுகிறது. சீன அரசு மகிந்தருக்கு உதவிகளை வாரி வழங்கி வரும்வேளையில், ஈழத் தமிழர்கள் இணைந்து இவ்வாறு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6927
மோடிக்கும் மகிந்தருக்கும் இடையே யுத்தம் ஆரம்பமாகுமா ? ஜி.எல் பீரிஸ் சொன்ன..
05 June, 2014 by admin
இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு விடுத்த நேரடிக் கோரிக்கையை மகிந்தர் நிராகரித்துள்ளமை பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. சோனியா அரசுடன் மகிந்தர் கண்ணாம்மூச்சி விளையாடியதுபோல , நரேந்திர மோடியுடனும் மகிந்தர் விளையாட நினைக்கிறார். இந்த பாச்சா பலிக்குமா ? பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6928
Geen opmerkingen:
Een reactie posten