தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

29 தமிழக மீனவர்களை கைது செய்த கடற்படையினர்!-மோடியின் கிழிந்த முகமூடி!



கை,கால்கள் கட்டப்பட்டு காட்டில் போடப்பட்ட பெண் நள்ளிரவில் மீட்பு!- ஹற்றனில் சம்பவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 06:31.20 AM GMT ]
ஹற்றன் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் எழுதுவிளைஞராக பணியாற்றும் 37 வயதான பெண், கை, கால்கள் கட்டப்பட்டு நோர்வூட் பொலிஸ் பிரிவின் கோர்த்தி தோட்டத்தில் பாழடைந்த இடமொன்றில் போடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர். 
நோர்வூட் பொலிஸார் நேற்றிரவு 11 மணியளவில் இந்த பெண்ணை மீட்டுள்ளதுடன் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பத்திரிகையில் வெளியிடப்பட்ட மணமகன் தேவை என்ற விளம்பரத்தை அடுத்து 10 நாட்களாக இளைஞர் ஒருவர் இந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர், மதியம் ஹற்றன் நகருக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இதன்படி அந்த பெண் ஹற்றன் நகருக்கு சென்றிருந்தார். பெண்ணை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்த இளைஞர், பெண்ணை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்று, கை, கால்களை கட்டிவிட்டு பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து மீட்கப்பட்ட பெண் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், கால் கட்டை அவிழ்த்து கொண்ட பெண், அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்று சம்பவம் பற்றி தெரியப்படுத்தியதை அடுத்து, அவர்கள் சம்பவம் குறித்து நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை தான் இதற்கு முன்னர் கண்டதில்லை எனவும் ஹற்றன் பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டியில் தன்னை அழைத்துச் சென்றதாகவும் அப்போது தனக்கு குடிப்பதற்கு மென்பானம் வழங்கப்பட்டதாகவும் அதனை அருந்திய பின்னர் தனக்கு என்ன நடந்தது என்பதை தான் அறியவில்லை எனவும் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
நோர்வூட் பொலிஸார் பெண்ணை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பியுள்ளனர்.
இதற்கு முன்னர் கொழும்பில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் பெண்ணொருவர் ஹற்றன் பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgo6.html
29 தமிழக மீனவர்களை கைது செய்த கடற்படையினர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 07:02.12 AM GMT ]
தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் 6 விசைப்படைகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தலைமன்னார் கடற்படை முகாமில் தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற நிலையில் மீனவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதற்கு முன் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.
இதன்படி மீனவர்கள் இந்த வாரம் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
29 இந்திய மீனவர்கள் தலைமன்னாரில் கைது
29 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று கரைக்கு அழைத்து வரப்பட்டு மீன்பிடி திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களிடம் இருந்து 6 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTVLZgpy.html

Geen opmerkingen:

Een reactie posten