தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

“13+” முழுமையாக வேண்டும் – சுவாமி

ஐ.நா விசாரணைக்குழு இந்த வாரம் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த வாரம் பலரது பெயர்கள் ஆராயப்பட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு, இன்னமும் இந்த விசாரணைக் குழுவின் நியமனம் குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில், இந்த விசாரணைக்குழு பற்றிய அறிவிப்பு இந்த வாரம் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வரும் 10ம் நாள் உரையாற்றவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா குறித்து கருத்து வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தமது உரையில் விசாரணைக்குழுவின் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதுடன், சிறிலங்கா அரசாங்கம் அதனை முறியடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கவுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71475.html

“13+” முழுமையாக வேண்டும் – சுவாமி

13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டுமென ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் துரித கதியில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியதென அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றியானது இலங்கைத் தமிழர் பிரச்சினையால் கிடைக்கப்பெறவில்லை எனவும், திமுகவின் 2ஜீ ஸ்பெக்;ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மோசடிகள் அம்பலானதனால் ஜெயலலிதா வெற்றியீட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் வைகோ சொந்த தொகுதியில் தோல்வியை தழுவியதாகத் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் இதில் அதிகமானவர்களுக்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் நிதி உதவி வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பலவீனமான நிர்வாகமே இலங்கை சீனாவுடன் நெருங்குவதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் காணி காவல்துறை அதிகாரங்களை பின்னர் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71478.html

Geen opmerkingen:

Een reactie posten