தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 juni 2014

13+ நடைமுறைப்படுத்த வேண்டும் இந்திய அமைச்சர்

இலங்கை இராணுவத் தீர்வு பிரச்சினைகளைத் தீர்க்காது

1980களில், பங்சாப்பில், காலிஸ்தான் பிரிவினைவாதப் போராட்டம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில், பஞ்சப் கால்துறை தலைவராக இருந்த இவர், இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளின் மூலம் தீர்வு காண முடியாது என்று வலியுறுத்தியுள்ள இவர், அதற்கு அயர்லாந்து மற்றும் ஸ்பெய்னின் பாஸ்க் ஆகியவற்றை உதாரணமாக எடுத்துக் கூறியுள்ளார்.
எனவே ஒரு இராணுவத் தீர்வு உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்காது. இராணுவத் தீர்வு காணப்பட்டதற்கு சிறிலங்காவை உதாரணமாக கூறலாம். அங்கு இராணுவ வழியில் தீர்வு காணப்பட்டாலும், இயல்பு நிலை அங்கு ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71834.html

13+ நடைமுறைப்படுத்த வேண்டும் இந்திய அமைச்சர்

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளவர் அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியுள்ளதாவது.
கேள்வி – புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார். சிறிலங்கா இனப்பிரச்சினைக்கான பாஜகவின் நடவடிக்கையாக இதனைக் கருத முடியுமா?
பதில் – இல்லை. இது தொடக்கம். எவ்வாறாயினும், எமது அயல்நாடு அமைதியை அடைவதற்கு உதவுவதும், பழைய கடப்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதுமே பாஜகவின் பங்கு. சிறிலங்காவின் ஏனைய செயல்முறைகள் தொடர வேண்டும். இந்தியா தலையிடாது – ஆனால், உதவும்.
கேள்வி – இந்த கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஏன் அவசரம் காட்டப்படுகிறது?
பதில் – இது ஒன்றும் புதிதான விவகாரங்களல்ல. பழைய உடன்பாடுகள். அவற்றை நிறைவேற்றுதல் சிறிலங்காவின் நலன்களுக்கு நல்லது.
கேள்வி – 13 பிளஸ் குறித்து இந்தியா வலியுறுத்துமா?
பதில் – ஒரு தீர்வை எட்டுவது சிறிலங்கா நிர்வாகத்தினதும் மக்களினதும் கைகளிலேயே உள்ளது.
கேள்வி – காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமா?
பதில் – பாஜகவின் நிலை தெளிவானது. 13வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே, எமது நிலைப்பாடு. அது முற்று முழுதானது. அதற்கு அப்பால் செல்வதென்பது சிறிலங்காவின் கடப்பாட்டுடன் தொடர்புடைய விவகாரம்.
கேள்வி – இந்த அதிகாரங்கள் பகிரப்படுவதால், பிரிவினைவாதம் ஊக்கம் பெறும் என்ற அச்சம் சிறிலங்காவில் உள்ளது. அந்த அச்சம் இந்தியாவுக்கு இல்லையா?
பதில் – நாம் அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாகவே பேசுகிறோம். நிலைமைகளை கையாளுவதற்கான பொறிமுறைகள் உள்ளன.
கேள்வி – ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் நிலையான அமைதியை எட்டுவதே இந்தியாவின் நிலைப்பாடு.
பதில் – பிரிவினைக்கு எந்தவகையிலும் நாம் ஆதரவளிக்க மாட்டோம். சிறிலங்காவின் பிராந்திய ஒருமைப்பாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.
http://www.jvpnews.com/srilanka/71837.html

Geen opmerkingen:

Een reactie posten