தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 3 juni 2014

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் – பிரதமரிடம் ஜெயா

தமிழ் மக்களை வெளியேற்ற பாகிஸ்தான் தீவிரவாத அதிகாரிகள் முஸ்தீபு

வவுனியா பாரதிபுரத்தில் குடியேறியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஐந்து பாகிஸ்தானிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் றிசாட்பதியுதீனுடன் இணைந்து அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு, சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப் படையினருடன் வந்த குறித்து ஐந்து பாகிஸ்தானிய அதிகாரிகள், அங்குள்ள 40 தமிழ் குடும்பங்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/71864.html

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் – பிரதமரிடம் ஜெயா

காவிரி நதி நீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, தமிழை ஆட்சி மொழியாக்குவது, தமிழக அரசின் கேபிள் டி.வி. சேவைக்கு அனுமதி வழங்குவது, மெட்ரோ ரெயில், போக்குவரத்து, மின்சார உற்பத்தி, ஊரக உள்கட்டமைப்பு மற்றும் போலீஸ் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அம்மனுவில் இடம்பெற்றிருந்தன.
1974-ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற்று, அப்பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன் பிடிக்கும் உரிமையை நிலை நாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் ஒன்றினை கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
’இலங்கையில் நடத்தப்பட்ட இனப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்து, இன அழிப்புக்கு காரணமானவர்களை அதற்கு பொறுப்பேற்க வைப்பதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்’ எனவும் அம்மனுவில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் முழுமையான விபரங்கள் எவையும் வெளியாகவில்லை. எனினும் ஈழத் தமிழக மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு, முல்லை பெரியாறு அணை, கூடங்குளம் மின்சார நிலையம், நதி இணைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Modi-JeyaModi-Jeya-01
http://www.jvpnews.com/srilanka/71867.html

Geen opmerkingen:

Een reactie posten