சிறிலங்கா கடற்படையினரால் தலை மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 29 தமிழ்நாட்டு மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ஆறு படகுகளுடன், இந்த மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து. தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும், மீனவர்கள் விவகாரத்தில், கடுமையானதும் உறுதியானதுமான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க சிறிலங்கா அதிபர் நேற்று
மலை உத்தரவிட்டுள்ளார்.
மலை உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இன்று, புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இதன்போது, அவர் கச்சதீவு விவகாரம், மீனவர் பிரச்சினை, குறித்தும் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு நிகழவுள்ள நிலையிலேயே, மீனவர்களை விடுவிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது
Geen opmerkingen:
Een reactie posten