[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 12:30.26 AM GMT ]
அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வாறு மாற்றங்களை செய்ய முடியாது.
தேசிய கீதத்தை அல்லது தேசிய கொடியை மாற்றி அமைக்க முயற்சிப்பது அரசியல் அமைப்பிற்கு முரணானது.
இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தினேஷ் குணவர்தன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாட முடியும் என அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தெற்கின் அரசியல்வாதிகள் பலரும், ஊடகங்களும் வெவ்வேறு வழிகளில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த வேண்டியேற்பட்டுள்ளது: விக்ரமபாகு
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 12:46.04 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, தற்போது நிறைவேற்று அதிகாரங்களை ரத்து செய்யாது, அதிகாரங்களில் திருத்தங்களை செய்ய முயற்சிக்கின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடி பணிந்துள்ளார்.
இதனால் நாட்டின் புத்திஜீவிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் நடத்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நேரிட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதில் தவறில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என்ற காரணத்தினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜாதிக ஹெல உறுமயவும் பிரதமர் மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என கோரி வருகின்றனர்.
அண்மையில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விக்ரமபாகு கருணாரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட மரண அடி: விக்ரமபாகு கருணாரட்ன
உருவாகியுள்ள புதிய தேசிய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள மரண அடி என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கொண்டுள்ளது. இது மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்போருக்கு கொடுக்கப்பட்ட மரண அடி.
இதனால், ஏற்பட்டுள்ள ஆத்திரத்தினாலேயே, விமல் வீரவன்ஸ, தினேஸ் குணவர்தன போன்றவர்கள் சத்தமிட ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls2B.html
Geen opmerkingen:
Een reactie posten