[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 12:08.21 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி மக்கள், மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தது இவ்வாறான ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அல்ல.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யவே மக்கள் வாக்களித்திருந்தனர்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், கடந்த அரசாங்கத்தின் கள்வர்களுக்கு தண்டனை விதிக்கவும் மக்கள் வாக்களித்தனர். எனினும் இந்த அரசாங்கம் கள்வர்கள், மோசடியாளர்கள், ஊழல் பேர்வழிகளை பாதுகாக்கின்றது.
விஞ்ஞான ரீதியான அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அமைச்சர்கள் பதவிகள் குட்டி போடத் தொடங்கியுள்ளன. இதனையே மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் மேற்கொண்டிருந்தது.
நூறு நாள் திட்டம் பூர்த்தியாக முன்னமே அரசாங்கம் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்துள்ள என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
போர் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளையும் கௌரவப்படுத்துவோம்: ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2015, 12:17.45 AM GMT ]
போர் இடம்பெற்ற காலத்தில் கடமையாற்றிய கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்படும்.
சரத் பொன்சேகா அப்போதைய அரசாங்கத்தினால் நெருக்குதல்களுக்கு இலக்கானவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிர் பிழைத்தவர்.
இவ்வாறான ஒருவருக்கு பதவிகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்குவதனை மக்கள் எதிர்க்கவில்லை.
போரை முடிவுக்குக் கொண்டு வர பங்களிப்புச் செய்த கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளை அரசாங்கம் மறந்து விடாது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக்க மற்றும் உயர் படையதிகாரிகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என கபீர் ஹாசீம் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRXSUls1J.html
Geen opmerkingen:
Een reactie posten