அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றமை கவலை அளிக்கின்றது: கல்முனை மாநகரசபை உறுப்பினர் சி.ஜெயகுமார்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 05:47.52 AM GMT ]
கிழக்கு மாகாண அமைச்சுப் பதவிகளில் அப்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை கவலையையும், அதிர்ச்சியையும் தருவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம் மூன்று மாவட்டங்களைக் கொண்டிருந்தாலும் அதில் அம்பாறை மாவட்டத்தில் 290,000க்கு மேற்பட்ட முஸ்லிம்களையும், 245,000க்கு மேற்பட்ட சிங்களவர்களையும் 125,000க்கு மேற்பட்ட தமிழர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும் என கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு எடுக்கவிருக்கும் அமைச்சுக்கள் தொடர்பாகவும், அம்பாறை மாவட்ட புறக்கணிப்பு பற்றியும், மக்களின் ஆதங்க நிலை பற்றியும் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கிழக்கில் கடந்த காலங்களில் சிங்கள,முஸ்லிம் அரசியல்வாதிகளின் அடக்கு முறையினால் திட்டமிட்ட வகையில் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கலை, கலாசாரம், இருப்பு, ஜீவனோபாயம் என்பனவற்றை நசுக்கி எமது மக்களை ஆண்டு வருகின்றார்கள்.
தமிழ்த்தேசியத்தில் பற்றுறுதியுடன் நின்று எமது தேசிய போராட்டத்திலும் அரசியலிலும் தங்கள் பலத்தை தொடர்ந்து நிரூபித்து வந்தவர்கள்தான் அம்பாறை மாவட்ட மக்கள் என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை அதனடிப்படையிலேதான் கடந்த மாகாணசபை தேர்தலிலும் இரண்டு பிரதிநிதிகளை பெற்றதுடன் சொற்ப வாக்குகளால் மூன்றாவது பிரதிநிதியையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு உறுப்பினரை தெரிவு செய்ததுடன் மேலும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை எமது அம்பாறை மாவட்ட வாக்காளர்கள் தெரிவுசெய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தெரிவு செய்யப்பட்ட பியசேன அரசின் பக்கம் சென்று பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்தாலும் எமது பற்றுறுதியான மக்களை அவர் பக்கம் சார்பாக வைத்துக் கொள்ள முடியவில்லை மாறாக எமது மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரால் எம் மாவட்ட மக்களுக்கு எந்த வித அபிவிருத்தியும் கிடைக்கவில்லை இவரது நிதியிலிருந்து ஒரு சிறு தொகையை தவிர ஏனைய முழுவதும் தொகையும் வடபகுதி அபிவிருத்திக்கே செல்கின்றது.
இது தவிர கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபை தேர்லில் தமிழர் ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அத் தேர்தலில் களம் இறங்காததை இட்டு மாற்றுக் கட்சியில் இருந்து மூன்று உறுப்பினர்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதி கூடிய வாக்குக்களுடன் மாகாணசபைக்கு அனுப்பி தமிழரை முதல்வராக்கிய மாவட்டமாகவும், அதே வேளை தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர் விவசாய மீன்பிடி அமைச்சராக இருந்தும் இவர்களது தமிழ்த்தேசிய விரோத போக்கினால் 2012ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 800 வாக்குக்களுக்குள் மட்டுப்படுத்திய பெருமையும் இம் மாவட்ட மண்ணையே சாரும்.
இது மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்தில் அரசுடன் இணைந்து பல குற்றச்செயல்களுடனும் எங்கள் அரசியலுக்கு வன்முறையை பயன்படுத்தி தனிக்காட்டு ராஜாவாகவும் ஜனாதிபதியின் இணைப்பாளராகவும் மாகாணசபை உறுப்பினருமான கருணா குழு இனியபாரதியை வீட்டிலிருந்து கடந்த மாதம் விரட்டியும், மாவட்டத்திலிருந்து விரட்டிய பெருமையும் இம் மாவட்ட மண்ணையே சேரும்.
போராட்ட காலங்களில் பல தியாகங்களை செய்ததுடன் மாமனிதர் சந்திர நேரு போன்றோரையும் இழந்ததும் இம் மாவட்டமே, சுமார் 33 கிராமங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அக்கிராமங்களில் பலர் தற்போது முற்றுமுழுதாக தமிழ் பேசும் சகோதர இனத்தினால் கபலிகரம் செய்யப்பட்ட நிலையிலும் ஏனைய கிராமங்களில் மீள் குடியேற அடிப்படை வசதிகள் அற்று அரசியல் அனாதையாக காணப்படும் இம் மாவட்ட மக்கள் தொடர்ந்தும் த.தே.கூட்டமைப்பு கட்சியினால் பாராமுகமாக பார்க்கப்படுவதாக உணரமுடிகின்றது.
இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ள இரு மாகாணசபை உறுப்பினர்களும் தங்களது பண்முகப்படுத்தப்பட்ட நிதியினை மிகச்சிறப்பாக மக்கள் நலன் சார் திட்டங்களுக்கு பயன்படுத்துவதுடன் இதற்கு மேலாக தங்கள் சொந்த நிதியினையும் புலம்பெயர் உறவுகளால் வழங்கப்படும் நிதிகளையும் சிறப்பாக பயன்படுத்தி மக்களுடன் மக்களாக உள்ளார்கள்.
ஆனால் பிற மாவட்டங்களில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் மாகாணசபை பிரதிநிதித்துவம் ஊடாக வரும் நிதியினை செயற்படுத்தும் மாகாணங்களாக உள்ளது அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மூன்றுகோடி ரூபாவும் ஆறு மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாக 2கோடியே 40 இலட்சம் ரூபாவும் மொத்தமாக ஐந்து கோடியே 40 இலட்சத்தை சாதாரணமாக செலவிடுவதுடன் அரசில் பலமும் அதிகாரங்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும் எவ்வித பயனும் இல்லை ஆனாலும் தொடர்ந்து தேசியத்துடன் நிலைத்திருக்கும் இம் மாவட்டத்தை கட்சி பாராமுகமாக பார்ப்பது கவலையளிக்கின்றது.
தற்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகளில் கூட அம்பாறை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளமையினால் கட்சி ஆதரவாளர்கள் உணர்வாளர்கள் விரக்தி அடைந்து காணப்படுகிறார்கள். எனவே இது சமூகத்தினால் ஒடுக்கப்பட்டு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ள எம் மக்களின் நலன் கருதி கட்சி தீர்க்கமான நடவடிக்கையினை உடனடியாக எடுக்க வேண்டும் அல்லது எமது மக்களிற்கான தெளிவை ஏற்படுத்த தலைமைகள் முன்வர வேண்டும் அவ்வாறு இல்லாமல் தான்தோன்றித்தனமாக கட்சி செயற்படுமாக இருந்தால் த.தே.கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் எதிர்கால அரசியலை செய்வது கேள்விக்குறியாகவே இருக்கும்.
தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 05:28.28 AM GMT ]
இவர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் ஊழியர்களுக்கு சீருடை அணிய வேண்டியது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலகியுள்ள நிலையில் பயணிகளுக்கு தடையின்றி செயற்பட இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திட்டப்பணிப்பாளர் எச்.டப்ளியூ.விபுலசேன தெரிவித்துள்ளார்.
ஹற்றனிலும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
தமக்கு வழங்கப்பட்டுள்ள சீருடையை அணிய முடியாது எனத் தெரிவித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் கொழும்புக்கு செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹற்றனிலிருந்து கொழும்புக்கு பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களுக்கு போதியளவிலான வசதிகள் இல்லையென தெரிவித்து பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx5B.html
Geen opmerkingen:
Een reactie posten