தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 maart 2015

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய தொழிலாளர்கள்

அரச புலனாய்வு பிரிவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 10:40.23 AM GMT ]
அரச புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டி.ஜி.நிலந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அமைதி, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் ஆலோசனையின் பேரிலேயே பொலிஸ் மா அதிபர் இந்நியமனத்தை வழங்கியுள்ளார்.
டி.ஜி.நிலந்த ஜயவர்தன இதற்கு முன்னர் காங்கேசன்துறை வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய தொழிலாளர்கள்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 10:54.00 AM GMT ]
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் புரிய சென்ற நிலையில், அங்கு பெரும் இன்னல்களை எதிர்நோக்கிய ஆயிரத்து 300க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதத்திற்குள் இவர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். மேல் மாடிகளில் தள்ளி விடப்பட்டமை, மேல் மாடிகளில் இருந்து குதித்தமை, உயரமான இடங்களில் இருந்து விழுந்தமை மற்றும் திடீர் விபத்துக்கள் காரணமாக உடல் நிலைமை பாதிக்கப்பட்டு வந்த சுமார் 20 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தொழில் ஒப்பந்தம் மீறப்பட்டமை காரணமாக நாடு திரும்பிய 40 பேரும் இதில் அடங்குகின்றனர்.
900க்கும் மேற்பட்டவர்கள் குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜோர்தான், லெபனான், கட்டார் போன்ற நாடுகளில் இருந்து ஏனையோர் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல பணம் இல்லாத நிலையில் இருந்த 600க்கும் மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு செல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பணத்தை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUmoyB.html

Geen opmerkingen:

Een reactie posten