மஹிந்த அரசாங்கத்தின் மர்மக் கொலைகள் கெஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது !
[ Mar 02, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 16945 ]
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, பிரதீப் எத்னெலி கொட காணாமற் போனமை மற்றும் ரகர் வீரர் வசிம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் ரத்துபஸ்வல மூவர் படுகொலை தொடர்பான விசாரணைக ளையும் புதிதாக ஆரம்பிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க, படுகொலை மற்றும் காணாமற்போனதாக கூறப்படும் பிரதீப் எத்னெலிகொட ரத்துபஸ்வல படு கொலைகள், ரகர் விளையாட்டு வீரர் வக்ம் தாஜுதீன் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என அமைச்சர் ஜோன் அமரதுங்க பொலிஸ் மா அதிபரிடம் கேட்டபோதே இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடாக மேற்படி தகவர்களை பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு மே மாதம் வசிம் தாஜுதீன் மர்மமான முறையில் மரணமாகியிருந்தார். நாரஹேன்பிட்டியில் இந்த சம்பவம் நடைபெற்றிருந்தது. இரண்டு சாட்சியங்கள் பதிவாகியிருந்தன. அந்த இடத்தில் மரண விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் இரசாயன பகுப்பாய் வாளரும் பார்வையிட்டிருந்தார். ஆனால் அன்று முதல் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது. எனினும் இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்திருக்கவில்லை. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தின் பின்னர் 2015.02.12 ஆம் திகதியே இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கை கிடைத்துள்ளது. எனினும் அந்த அறிக்கையிலும் மரணத் துக்கான காரணத்தை கண்டறியக்கூடிய எந்த சாதகமான விடயங்களும் இல்லை.
எனினும் மரண விசாரணை அறிக்கை யின்படி இவரது உடலில் காபன் மொனோக்சைட் கலந்திருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இரகசியப் பொலிஸாரினால் விசார ணைகள் புதிதாக ஆரம்பிக்கப்படும். இவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் எதுவும் இருக்கவில்லை என்றே பதிவாகியுள்ளது. இதேபோன்று பிரதீப் எத்னெலிகொட தொடர்பான விசாரணைகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக 2010.01.24 ஆம் திகதி மாலை இவர் காணமற் போயுள்ளதாக ஹோமாகம பொலி ஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட் டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். 48 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்ப ட்டுள்ளன.
இரண்டு சிம்கார்ட்டுகள் தொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட்டன. போலியான பெயர் வழங்கப்பட்டே சிம்கார்ட் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விசாரணையையும் புதிதாக ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.மேலும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணைகளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படுகிறது. 2009.01.08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் வைத்து லசந்த படுகொலை செய்யப்பட்டார். கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. பொலிஸார் விஞ்ஞான ஆய்வு ரீதியான விசாரணைகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் இரண்டு பேர் கைதானதுடன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலத்தினுள் மரணமானார். அடுத்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் கல்கிஸ்ஸ நீதிமன்றம் லசந்த விக்கிரமதுங்கவின் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் உத்தரவிட்டிருந் தமைக்கு அமைய இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரத்துபஸ்வல மூவர் படுகொலை தொடர்பான விசாரணைகளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. 2013.01.01 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த விசாரணைகள் அனைத்தும் மிக குறுகிய காலத்துள் முடிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இலங்கையில் ஓர் கிளர்ச்சி–அது "றோ"வின் பின்னணியில் இடம்பெற்றது மகிந்த !
[ Mar 02, 2015 01:16:40 PM | வாசித்தோர் : 6270 ]
இலங்கையில் ஒரு கிளர்சிச் சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் "றோ" (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னாள் அதிபர் ,மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார். “கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடபகுதி மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்” எனவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான ‘டோன்’ பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தங்காலையிலுள்ள தன்னுடைய கால்டன் இல்லத்தில் வைத்து டோன் பத்திரிகையாளருக்கு மகிந்த பேட்டியளித்தார்.
“இப்போதும் நீங்கள் ஜோதிடத்தை நம்புகின்றீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, “இப்போது நான் நம்பவில்லை” எனக் கூறி பலமாகச் சிரித்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்த மகிந்த ராஜபக்ஸஷ, “அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு நாடுகளைப் பாருங்கள். அவர்கள் எமது நண்பர்களல்ல” எனவும் குறிப்பிட்டார்.
“பாகிஸ்தான் எமக்கு உதவியது. விஷேடமாக முஸாரப் உதவினார். இப்போது எமது நாட்டில் என்ன நடைபெற்றிருக்கின்றது எனப் பாருங்கள்? இங்கு ஒரு சதி இடம்பெற்றிருக்கின்றது. அது "றோ" தான் என்று மீண்டும் மீண்டும் கடுப்புடன் கூறியுள்ளார் மகிந்தர்.
http://www.athirvu.com/newsdetail/2445.htmlஇலங்கைக்கு புது தலைவலி: எமக்கு எதனையும் அரசு தரவில்லை என்றார் விக்கி
[ Mar 02, 2015 01:28:40 PM | வாசித்தோர் : 4675 ]
தமிழருக்கு புதிதாக எதுவும் தரவில்லை. பறித்தவற்றையே வழங்குகிறது மைத்திரி அரசு என்று சிங்கள ஆட்சியாளர்கள் முன் நிலையிலேயே வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளமை பெரும் சலசலப்பை தோற்றுவித்துள்ளது. எம்மிடமிருந்து பறித்தவற்றையும், எமக்குச் சட்டப்படி வழங்க வேண்டியவற்றையுமே புதிய அரசு தருகின்றது. புதிதாக எதையும் தரவில்லை. இவ்வாறு கொழும்பு அரசின் அமைச்சர்கள் முன்பாக, கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.பொது நூலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கே கூடியிருந்த சிங்கள அமைச்சர்கள் , உடனே சலசல்ப்பாகா பேச ஆரம்பித்து விட்டார்கள். இது இவ்வாறு இருக்க , ஐ.நா. பேரவையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சரை காலை 11 மணிக்கு சந்தித்துள்ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. விக்கினேஸ்வரன் இக்கருத்தையே அங்கேயும் முன்வைப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வடமாகாண முதலமைச்சர் , சற்று தீவிரமாக தான் இருக்கிறார். இன அழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் நினைவில் இருக்கும். இன் நிலை நீடித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் அவர் எடுபிடி சுமந்திரன் ஆகியோர் நிச்சயம் விக்கினேஸ்வரனோடு வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்குச் செல்வார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2446.html
Geen opmerkingen:
Een reactie posten