முன்னாள் வி. புலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதில் உரிமை மீறல்கள்!- சர்வதேச சட்டத்தரணிகள்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 09:34.45 AM GMT ]
இலங்கையின் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகளை சர்வதேச அமைப்புகள் இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்தன.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் சிறிலங்காவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தன.
யுத்தம் நிறைவடைந்து பல வருடங்களின் பின்னரும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.
இந்தநிலையில் புதிய அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இந்தியத் துணைத்தூதருடன் சந்திப்பு
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 10:08.49 AM GMT ]
இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், பதில் தூதர் தட்சணாமூர்த்தி, வடமராட்சி கிழக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் சூரியகாந், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுமார் 45 நிமிடங்கள் வரையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அண்மையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட அப்பகுதி மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியதுடன் வலைகள் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியது தொடர்பாக இந்திய துணைத்தூதருக்கு கடற்றொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
பிரச்சனைகளை கேட்டறிந்த இந்தியத்துணைத்தூதர் இது தொடர்பாக இந்திய கரையோர மாவட்டங்களின் மீனவர்களுக்கு அறிவுரைகள் கூறியிருப்பதுடன், விதிமுறைகள் தொடர்பாகவும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு தண்டம் அறவிடுவது தொடர்பாகவும் விளக்கியுள்ளதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்ததுடன் மிக விரைவில் நேரில் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்து மீனவர்களோடு கலந்துரையாட இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கும் ஜனாதிபதிக்கும் தொடர்பில்லை: ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 10:09.57 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்ட பின்னர், பெயரளவு ஜனாதிபதி பதவியினால் எந்த பயனுமில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவி்த்திருந்தார்.
அத்துடன் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய 62 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். மைத்திரிபால சிறிசேனவை அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக பார்க்க அந்த மக்கள் விரும்ப மாட்டார்கள்.
இதனால், அவரை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அமைச்சரின் இந்த கருத்துக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என தர்ம ஸ்ரீ பண்டார ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் உரிமையை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும்
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 09:43.58 AM GMT ]
எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று சொல்லுவார். அதே ஆள் ஆட்சிப்பீடம் ஏறினால் போதும் சொன்னதெல்லாம் மறந்து, தமிழர்களுக்கு இந்த நாட்டில் உரிமை கிடையாது என்று பகிரங்கமாகக் கூறுவார். இதுவே இந்நாட்டின் வரலாறாயிற்று.
எனவே தமிழர்களின் பிரச்சினைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள் என்பது நிறுத்திட்டமான உண்மை.
அவ்வாறு சிங்கள ஆட்சியாளர்கள் தாமாக முன்வந்து தீர்வைத் தருதல் என்ற ஒரு நிலைமை ஏற்படுவதாக இருந்தால்,தமிழர்களின் பிரச்சினையால் நாங்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை என்று சிங்கள சமூகம் முழுமையாக உணரும் போதே அது சாத்தியமாகும்.
அத்தகையதொரு சாத்தியப்பாடு விடுதலைப் புலிகளின் காலத்திலேயே ஏற்பட்டிருக்க முடியும்.
விடுதலைப்புலிகள் நடத்திய விமானத் தாக்குதலின் அடுத்த கட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பதாக இருந்திருக்கும்.
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை சிங்கள மக்களே வலியுறுத்தியிருப்பர். அந்தளவிற்கு புலிகளின் விமானத் தாக்குதல் வேலை செய்திருக்கும்.
எனினும் விடுதலைப் புலிகள் விமானத்தாக்குதல் நடத்தும் திறனை வெளிப்படுத்திய போது, புலிகளை ஒடுக்கவேண்டும் என சர்வதேச சமூகம் முடிவு செய்தது போலும். அதன் விளைவே 2009ம் ஆண்டில் நடந்த இறுதிப் போராகும்.
ஆக, தமிழர்கள் தங்களின் உரிமைகளை தங்களின் தியாகத்தின் ஊடாக அடையவிருந்த வேளையில், சர்வதேச சமூகத்தின் சதி அரங்கேறியது. இதன் காரணமாக தமிழினம்பட்ட துயரங்களை நாம் சொல்லவேண்டியதில்லை.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று மகிந்த ராஜபக்ச சர்வதேச சமூகத்திடம் உறுதி அளித்திருந்த போதிலும் அதனை அவர் செய்ய மறுத்ததோடு சர்வதேச சமூகத்தை அதட்டவும் முற்பட்டார்.
ஐ.நா சபையை விமர்சிக்கும் அளவில் மகிந்த ராஜபக்வின் தடிப்பு இருந்தது.
இச் சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்சவை முதலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் முடிவு கடந்த ஜனவரி 8ந் திகதி நிறைவேறியது.
இந்த நிறைவேற்றம் சர்வதேச சமூகத்திற்குத் திருப்தியாக இருக்கலாமே அன்றி பூரண திருப்தியாக இருக்க முடியாது.
ஏனெனில் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. இருந்தும் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என சர்வதேச சமூகம் கருதி அமைதி அடைந்து விடுமோ! என்ற ஏக்கம் ஈழத்தமிழர்களிடம் நிறையவே உண்டு.
எனவே ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய இலங்கைத் தமிழினம் இன்று வெறுங்கையோடு நிற்கிறது.
மீளவும் ஒரு போராட்டம் சாத்தியமற்றது என்ற கருத்துக்கள் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வெளிப்பட்டுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உரிமை என்பது சர்வதேச சமூகத்தால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என்பது நிரூபணமாகின்றது.
ஆக, சர்வதேசத்தின் பணி மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியதோடு முடியவில்லை. மாறாக சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழர்களின் உரிமையை வலிந்து பெற்றுத்தருவதாக இருக்கவேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx7E.html
Geen opmerkingen:
Een reactie posten