[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 08:43.39 AM GMT ]
முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக் கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக குறித்த ஆறு பேரும் இன்று திருகோணமலையில் ஊடகவியலாளர் சந்திபோன்றை நடாத்தி தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, டப்ளியு.டி.எச் வீரசிங்க, ஜயந்த விஜேசேகர, டி.எம்.ஜயசேனவும் கட்சியை சேர்ந்த எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.எம். ஆமீர் லெப்பை ஆகியோரே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx7A.html
ஐ.நா அறிக்கை செப்ரெம்பரில் நிச்சயம் வெளிவரும்: யாழில் ஐ.நா அதிகாரிகள் முதலமைச்சரிடம் உறுதி
[ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 08:35.20 AM GMT ]
முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 11மணிக்கு சந்தித்த மேற்படி அதிகாரி தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றம் விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைசார் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினர்.
குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,
குறித்த சந்திப்பில் இலங்கை மீதான சர்வதேச விசாரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் நாங்கள் கேள்வி எழுப்பியிருந்தோம். அதன்போது அவர்கள் கூறியிருந்தார்கள்.
அங்கத்துவ நாடுகளின் சில கோரிக்கைகள் காரணமாகவே அறிக்கை பிற்போடப்பட்டதாகவும் எனினும் செப்டம்பர் மாதத்தில் அறிக்கை நிச்சயம் வெளியாகும் எனவும் உறுதிபடக் கூறியிருந்தார்கள்.
மேலும் நாம் வடமாகாணசபையில் நிறைவேற்றியிருந்த இன அழிப்பு தீர்மானம் எதற்காக என அவர்கள் எம்மிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு நாம் தெளிவாக கூறியிருக்கின்றோம்.
அது எங்களுடைய மக்களின் மனதிலிருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடாகும் என்பதை. மேலும் எமக்கு சரியான சந்தர்ப்பம் அதுவென கருதியமையினாலேயே அதனை நிறைவேற்றினோம். எனவும் கூறியிருக்கின்றோம்.
மேலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டாலே இங்கு நடந்தவை தொடர்பில் உண்மைகள் வெளிவரப்பட்டு தாமதிக்காது நீதி கிடைக்க வேண்டும். இந்த நீதியையே தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். என்பதை கூறியிருப்பதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTWSUnx6J.html
Geen opmerkingen:
Een reactie posten