யாழ்.மாநகர சபையினால் எந்தவித முன்னறிவித்தலுமின்றி கடைக்கு சீல் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நகர வர்த்தகர்களும், பணியாளர்களும் இன்று பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.மாநகர சபை ஆணையாளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரிலுள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டி பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று காலை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாநகர சபையினால் எந்தவித முன்னறிவித்தலுமின்றி கடைக்கு சீல் வைக்கப்பட்டள்ளது. அவ்வாறு வைக்கப்பட்டுள்ள கடையின் சீலில் ஸ்ரான்லி வீதி எனக் குறிப்பிடப்பட்டு அதுவும் அழிக்கப்பட்ட நிலையிலையே இருக்கின்றது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தாது வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரினர்.
யாழ் நகரில் அமைந்திருக்கின்ற வர்த்தக நிலையங்களின் முன்னால் மாநகர சபையினால் இடப்பட்டிருக்கும் மஞ்சல் கோட்டிற்கு அப்பால் பொருட்களை வைக்க வேண்டாமென்று வர்த்தகர்களுக்கு மாநகர ஆணையாளரினால் அறிவுறுத்தல் விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் அறிவுத்தலை மீறியதாக குற்றஞ்சாட்டி மாநகர சபையினால் குறித்த வர்த்தக நிலையமொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. ஆயினும் வர்த்தகர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு மாநகர ஆணையாளரின் அடாவடித்தனமே காரணம், வர்த்தகர்கள் தொடர்பில் ஆனையாளர் தான் தோன்றித்தனமாகவே செயற்பட்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட வர்த்தகர்களை மீண்டும் பாதிக்க வைக்காதே, வர்த்கர்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இவ்வாறு வர்த்தகர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இக் கருத்து முரண்பாடு முற்றியதையடுத்து அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். பொலிஸார் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்ற போதும் அதிலும் தீர்வு
எட்டப்படாத நிலையில் நிலைமை மோசமாகியது.
எட்டப்படாத நிலையில் நிலைமை மோசமாகியது.
இதனையடுத்த அங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர். இதன் போது வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். இதன் போது வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கும் அவைத் தலைவர் சிவஞானத்திற்கும் இடையில் இடம்பெற்ற கடலந்துரையாடலினூடாக பிரச்சனைகளுக்குத் தீர்வு எட்டப்பட்டது.
அதாவது சீல் வைத்த கடை திறக்கப்பட்டதுடன் ஏனைய வர்த்தகர்களும் தமது கடைகளைத் திறந்து வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். ஆயினும் தொடர்ந்தும் நகர வர்த்தக நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr4B.html
Geen opmerkingen:
Een reactie posten