[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 08:35.07 AM GMT ]
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்த தெரிவித்த அவர்,
அரசியலில் அநாதைகளாக்கப்பட்ட சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள்.
அவரை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கிறாரகள்.
உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச ஆகியோர் கூட்டு சேர்ந்து கூலிக்கு மக்களை அழைத்து செல்கிறார்கள்.
ஹம்பந்தோட்டை கால்டன் வீட்டிற்கும் பஸ்களில் மக்களை அழைத்து சென்று கூலிக்கு மக்களை அழவைப்பதாகவும் தகவல் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமையாக செயற்படவில்லை என்றால் அரசாங்கம் தொடர்ந்து இயங்காது: பிரதமர்
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 09:01.07 AM GMT ]
பல்வேறு எண்ணங்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு தேசிய அரசாங்கத்தினுள் செயற்பட முடியுமா என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்புயுள்ளார்.
மேலும் இந்த அரசாங்கத்தின் ஊடாக பல வேலைத்திட்டத்தை மேற்கொள்வதே தன் எண்ணமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான கர்ப்பிணி தாய்மார்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு வழங்கும் தேசிய நிகழ்வு குறித்த நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன் போது கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க பழைய அரசியல் முறை நீக்கப்பட்டு புதிய அரசியல் முறையின் ஊடக பயணிக்கும் காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை எதிர்க்கவில்லை: ஜாதிக ஹெல உறுமய
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 09:16.13 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கையெழுத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தை தமிழில் பாட இடமளித்தமை தொடர்பில் நாட்டில் வாத விவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை அடிப்படையாக கொண்டு சிலர் இல்லாத பிரச்சினையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.
குறுகிய அரசியல் தேவைக்காக தேசிய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கு சேதம் ஏற்படும் வகையில், அவர்களின் முயற்சியை அருவருப்புடன் ஒதுக்கி தள்ளுகின்றோம்.
தமிழ் மக்களோ, தமிழ் அரசியல் தலைவர்களோ, தேசிய கீதத்தின் மெட்டை மாற்றியமைக்குமாரோ, வார்த்தைகளை மாற்றுமாரோ எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.
தமிழ் மக்கள் தமது துன்ப துயரங்களாக வேறு பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர். தேசிய கீதம் என்பது எமது தேசிய சொத்து. தேசிய கொடியை போல தேசிய கீதமும் எமது தேசிய அடையாளம்.
இதனால், நாட்டின் அரசியலமைப்பு அதற்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. தேசிய கீதத்தை தமிழில் பாடவும் தேசிய கீதத்தின் மூலம் நாட்டு குடிமக்களிடம் ஏற்படுத்த போகும் உணர்வு என்ன?
தமிழ் பேசும் மக்கள் தேசிய கீதத்தை தமது மொழியில் பாடுவதன் மூலம் நாட்டின் மீது பற்று ஏற்படும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr3A.html
தேசிய கீதத்தை தமிழில் இசைக்க மறுப்பு தெரிவித்தால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும்: பிரதிபா மஹானாம
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 09:53.07 AM GMT ]
ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதிபா மஹானாம ஹேவா சிங்கள ஊடகமொன்றிற்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்கலாம் என அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது என சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்துள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அதன் பின்னர் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும்,
இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் செயற்பட வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr3C.html
மங்கள ஒரு பொய்யன்: தமாரா குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 08:34.21 AM GMT ]
உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்வைத்து நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சு பதவிக்கே தகுதியற்றவர் என ஐ.நா சபையின் இலங்கைக்கான முன்னாள் பிரதிநிதி தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமாரா குணநாயகம் 1980ம் ஆண்டு இறுதி பகுதிகளில் புலிகளின் ஆதரவு அமைப்பொன்றுடன் இணைந்து செயற்பட்டதுடன், புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களையும் முன்வைத்தார் என வெளிவிவகார அமைச்சர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காலப்பகுதியில் மங்கள சமரவீர மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து முன்னெடுத்த அன்னையர்கள் அமைப்புடன் அனுசரணையாக செயற்பட்டு வந்தேன் எனவும்,
குறித்த அமைப்பினால் மாத்தறையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டேன் எனவும் தமாரா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இச்சந்தர்ப்பங்களின் போதும் தான் புலிகள் சார்பு அமைப்புக்களுடன் இணைந்து எதுவித தொடர்புகளையும் பேணாத போதும், குறித்த அமைப்புக்களினால் எனக்கெதிரான மிரட்டல் கடிதங்களும், விமர்சனங்களுமே எழுந்தன என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் குறித்த ஒப்பந்தம் தொடர்புடைய உண்மையை திரைமறைவிற்குள் கொண்டு செல்லும் நோக்கிலேயே என் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைக்கிறார் எனவும்,
ஒரு வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் எனவும் தமாரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை தன்மீது சுமத்திய அமைச்சருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து வருவதாக தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr2G.html
Geen opmerkingen:
Een reactie posten